தமிழ்நாடு சுதந்திர தின விருது 2026 / TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026
TNPSCSHOUTERSAugust 15, 2026
0
தமிழ்நாடு சுதந்திர தின விருது 2026 / TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026: முதல்வர் விஜய் இன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிறகு, காவல்துறை பதக்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வழங்கினார்.
நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருது, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் எம்.கீதாஞ்சலி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, அரசு புனர்வாழ்வு மருத்துவமனை இயக்குநர் திருநாவுக்கரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவர் விருது ஆகியவற்றை வழங்கினார்.
தகைசால் தமிழர் விருது
தமிழ்நாடு சுதந்திர தின விருது 2026 / TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026: தமிழ்நாடு அரசால் கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அன்புமணி மனைவியும் எம்.எல்.ஏவுமான சவுமியா அன்புமணியின் தந்தை ஆவார்.
தகைசால் தமிழர் விருதை பெறும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கும், 2022 ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, 2023 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், 2025 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொயதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கல்பனா சாவ்லா விருது
தமிழ்நாடு சுதந்திர தின விருது 2026 / TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026: ரசாகசம் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 2 முறை தொட்டவர். டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் என்ற உலகிலேயே கடினமான மலையேற்றத்தை அவர் ஏறியுள்ளார்.
சிறந்த மாநகராட்சி
முதல் பரிசு - கோவை
இரண்டாம் பரிசு - தஞ்சை
சிறந்த நகராட்சி
முதல் இடம் - போடிநாயக்கனூர்
2-வது இடம் - ஆரணி
3-வது இடம் - விழுப்புரம்
சிறந்த பேரூராட்சி
முதல் பரிசு - திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்)
2-வது இடம் - கருங்கல் (குமரி மாவட்டம்)
ENGLISH
TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026: After hoisting the national flag at Fort St. George today, Chief Minister Vijay presented police medals and awards across various categories.
He presented the Abdul Kalam Award to diabetologist Dr. Mohan; the Chief Minister's Award for Good Governance to Dr. M. Geethanjali (Dean, Coimbatore Medical College Hospital) and to Satish Prabhu and his team from the Metro Rail Corporation; and the Tamil Nadu Government's 'Best Doctor Award'—recognizing outstanding service for the welfare of persons with disabilities—to Thirunavukkarasu, Director of the Government Rehabilitation Hospital.
Thagaisal Tamizhar Award
TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026: The 'Thagaisal Tamizhar Award' (Distinguished Tamilian Award), instituted by the Tamil Nadu government in 2021, has been awarded to senior Congress leader Krishnasamy. He is the father of Sowmya Anbumani, an MLA and the wife of Anbumani.
The recipient of the Thagaisal Tamizhar Award receives a cash prize of ₹10 lakh. Previous recipients include veteran Communist leader N. Sankaraiah (2021), senior Communist leader Nallakannu (2022), Dravidar Kazhagam leader K. Veeramani (2023), senior Congress leader Kumari Ananthan (2024), and Indian Union Muslim League leader K.M. Kader Mohideen (2025).
Kalpana Chawla Award
TAMILNADU INDEPENDENCE DAY AWARD 2026: The Kalpana Chawla Award, recognizing acts of courage and bravery, was presented this year to Navsheen Banu Chand from Coimbatore. She has scaled Mount Everest—the world's highest peak—twice.
She has also completed the Tenzing-Hillary Everest Marathon, considered one of the most challenging mountaineering feats in the world.
Best Municipal Corporation
First Prize - Coimbatore
Second Prize - Thanjavur
Best Municipality
First Place - Bodinayakanur
Second Place - Arani
Third Place - Villupuram
Best Town Panchayat
First Prize - Thiruvidaimarudur (Thanjavur District)