//
Type Here to Get Search Results !

1st AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

1st AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆந்திராவில் ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் 
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்தும் வகையில், சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில், சுமார் ரூ.5,600 கோடிக்கும் அதிகமான செலவில் பொது-தனியார் கூட்டு முறையில் அமைக்கப்பட்ட 'அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை' பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆந்திராவின் பாரம்பரியக் கட்டடக்கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையம் முதற்கட்டத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
  • விசாகப்பட்டினத்தில் ரூ.460 கோடி செலவில் அமையவுள்ள ஆந்திராவின் முதல் செமிகண்டக்டர் ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கர்நூல் மற்றும் அனந்தபூரில் அமைக்கப்பட்ட சோலார் மற்றும் காற்றாலை மின் வழித்தடத் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
2026 ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் - ரூ.2.11 லட்சம் கோடி
  • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.1.83 லட்சம் கோடியாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த மாதம் ரூ.1.95 லட்சம் கோடியாக இருந்த வசூலும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
  • மேலும் நாட்டின் ஜூலை மாத சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 15.4 சதவீதம் உயர்வாகும். மத்திய அரசின் தரவுகளின்படி, இந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ.39,835 கோடியாக பதிவாகியுள்ளது. 
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ.47,881 கோடியாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.1.23 லட்சம் கோடியாகவும் வசூலாகியுள்ளது. 
  • ஜிஎஸ்டி பகிர்வின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.7,391 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடியை வரிப் பகிர்வுத் தொகையை விடுவித்தது 
  • நடப்பு பொருளாதார ஆண்டு மத்திய பட்ஜெட்டில் (2026-27), மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு மூலமாக மொத்தம் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இதில் 16வது நிதி ஆணையம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், மாநிலங்களின் வரிப் பகிர்வு பங்கு தொடர்ந்து 41 சதவீதமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளது.
  • இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.4,466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களை எவ்வித தடையும் இன்றி செயல்படுத்த இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு வெளியிட்ட நிதிப் பகிர்வில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தப் பட்டியலில் உத்தரபிரதேசம் - ரூ.19,208 கோடி, பீகார் - ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசம் - ரூ.8,010 கோடி, மேற்கு வங்கம் - ரூ.7,866 கோடி, மகாராஷ்டிரா - ரூ.7,022 கோடி, ராஜஸ்தான் - ரூ.6,460 கோடி, ஒடிஷா - ரூ.4,819, ஆந்திர பிரதேசம் - ரூ.4,597 கோடி, கர்நாடகா -ரூ.4,504 கோடி, தமிழ்நாடு - ரூ.4,466 கோடி, ஜார்க்கண்ட் - ரூ.3,660 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 9வது நாள்
  • கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், நாள்தோறும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
  • அந்த வகையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ப்ரீத்தி பவார் மற்றும் ஜெய்ஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
  • அந்த வகையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ப்ரீத்தி பவார் மற்றும் ஜெய்ஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
  • இதன்மூலம் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பட்டங்களைக் கைப்பற்றி உள்ளனர். 
  • இதுதவிர, ஆடவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்ராவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வா பிரபு திருமாரன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 
  • அடுத்து, இந்தியாவின் ஜடுமணி சிங் மண்டெங்பாம் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல், 'ஷாட் புட் F57' (Shot Put F57) பிரிவில், இந்தியாவின் சோமன் ரானா மற்றும் சுபம் ஜூயல் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். 
  • இதன்மூலம், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை, 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel