
18th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பெண் பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை அதிகரிப்பு
- தமிழ்நாடு பேரவையில் இன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் பேசுகையில், தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பெண் பணியாளர்களுக்கும் மூன்றாவது குழந்தைக்கும் 365 நாள்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- இதுவரை, அரசு ஊழியர்களுக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் 365 நாள்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதிய சலுகையாக 3வது குழந்தைக்கும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப் 365 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது
- கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த விகிதம் 5.5% ஆக இருந்த நிலையில், தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்துள்ளதால் இம்மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.
- தேசிய புள்ளியியல் ஆய்வகத்தின் காலமுறையிலான தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் மொத்தமாக 55.4 சதவிகிதத்தில் இருந்து 54.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
- புள்ளி விவரங்களின்படி, வேலைவாய்ப்பின்மை குறைவுக்கு கிராமப்புறங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனினும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவிகிதமாக மாற்றம் காணாமல் உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஒட்டுமொத்த மற்றும் கிராமப்புற வேலையின்மை விகிதங்கள் ஏறக்குறைய நிலையாகவே உள்ளன.
- அதேவேளையில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூலை 2025-ல் இருந்த 7.2 சதவீதத்திலிருந்து ஜூலை 2026-ல் 6.7 சதவீதமாக 0.5 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

