//
Type Here to Get Search Results !

12th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

12th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.828 கோடி விடுவித்து அரசாணை
  • கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.702 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
  • இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டு, அதற்கான நிதியையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அரசிடம் பரிந்துரைத்தார்.
  • சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3.54 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதற்காக மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 2026-27-ம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை விடுவிக்க அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் புதிய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • முந்தைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதியை செலவிடக் கூடாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் விடுவிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
  • தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள்.
  • அதிமுக, பாஜக,பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. 
FCRA மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
  • மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா விரிவான பரிசீலனைக்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறுவர். 
  • இக்கூட்டுக்குழு இம்மசோதா குறித்து விரிவாக ஆய்வு செய்து, 2026-ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel