//
Type Here to Get Search Results !

போஷன் டிராக்கர் டிஜிட்டல் தளம் / POSHAN TRACKER DIGITAL PLATFORM

  • போஷன் டிராக்கர் டிஜிட்டல் தளம் / POSHAN TRACKER DIGITAL PLATFORM: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களைந்து, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் ஊட்டச்சத்து இயக்கத்தின் (போஷன் அபியான்) கீழ் 'போஷன் டிராக்கர்' என்ற மொபைல் செயலி அடிப்படையிலான டிஜிட்டல் தளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 
  • மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2021 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தளம், அங்கன்வாடி மையங்களின் சேவைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் நிர்வாகக் கருவியாகத் திகழ்கிறது. 
  • இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 781 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இத்தளத்தில் தகுதியுள்ள சுமார் 8.93 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த டிஜிட்டல் தளம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 11 கையேடு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது, இது சேவை வழங்கலில் காலதாமதத்தை ஏற்படுத்தியது. 
  • தற்பொழுது போஷன் டிராக்கர் செயலி மூலம் அங்கன்வாடி உள்கட்டமைப்பு வசதிகள், பயனாளிகளின் விவரங்கள், குழந்தைகளின் வளர்ச்சி நிலை ஆகியவை நிகழ்நேரத் தரவுகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. 
  • இதற்காக அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களும், ஆண்டுதோறும் இணைய வசதிக்கான செலவாக 2,000 ரூபாயும் வழங்கப்படுகின்றன. 
  • இத்தளத்தில் போலிப் பதிவுகளைத் தவிர்க்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சேவைகள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் பயோமெட்ரிக், முக அங்கீகார சரிபார்ப்பு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
  • குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளின்படி துல்லியமாகக் கணக்கிட இந்தச் செயலியில் பிரத்தியேக ஊட்டச்சத்துக் கணக்கீட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் குழந்தைகளின் வயது, பாலினம், உயரம், எடை ஆகியவற்றின் அடிப்படையில், குறைவான எடை கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுகின்றன. 
  • இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 2023 மே மாதத்தில் 7 சதவீதத்தில் இருந்து, 2026 மே மாதத்தில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
  • 2024 மார்ச்-ல் தொடங்கப்பட்ட ‘ஆதார்ஷிலா’ தேசிய பாடத்திட்டத்தின் கீழ், 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆரம்பகால பராமரிப்பும் கல்வியும் வழங்கப்படுகிறது. 
  • அங்கன்வாடி மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பொம்மைகள், கலை, இசை, கதைசொல்லாடல் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளையாட்டு அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கிறது. 
  • ‘அடித்தளம்’ என்று பொருள்படும் ஆதார்ஷிலா, குழந்தைகளின் அறிவாற்றல், சமூக, உணர்ச்சி, உடல் ரீதியான வளர்ச்சியை ஆதரிப்பதோடு, அவர்களை ஒன்றாம் வகுப்பிற்குத் தயார்படுத்துகிறது.
  • இத்தகைய சிறப்பான செயல்பாடுகளுக்காகப் போஷன் டிராக்கர் தளத்திற்கு 2025 ஏப்ரலில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமரின் விருது வழங்கப்பட்டது. 
  • காகிதமில்லா, வெளிப்படையான ஊட்டச்சத்து ஆளுகைக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும் இத்தொழில்நுட்பக் கட்டமைப்பு, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

ENGLISH

  • POSHAN TRACKER DIGITAL PLATFORM: POSHAN Abhiyaan (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment) is India’s flagship National Nutrition Mission focused on improving nutrition outcomes through convergence, technology and community mobilisation. 
  • Launched on March 8, 2018, it is the Government of India's flagship multi-ministerial mission that works under a unified framework with time-bound targets, digital monitoring and a Jan Andolan approach. 
  • Anchored in the Ministry of Women and Child Development (MoWCD), the mission has transformed nutrition from a welfare concern into a national development priority.
  • Later, under Budget 2021–22, three nutrition related schemes - Poshan Abhiyan, Anganwadi Services and Scheme for Adolescent Girls were consolidated under Mission Poshan 2.0 (Mission Saksham Anganwadi and Poshan 2.0).
  • Poshan Tracker is a mobile-based governance application that forms the digital backbone of POSHAN Abhiyaan. It serves as the primary governance tool to strengthen digital monitoring under the Abhiyaan. 
  • It was launched in March 2021 through the MoWCD and the National e-Governance Division (NeGD), under Saksham Anganwadi and Poshan 2.0. It enables near real-time monitoring of nutrition and service delivery under Anganwadi Services through a unified digital platform.
  • Poshan Tracker captures data on Anganwadi infrastructure, service delivery, beneficiary coverage, and growth monitoring. Smartphones and internet connectivity enable seamless data entry by Anganwadi Workers. 
  • Real-time dashboards support transparent and evidence-based decision-making at district, state, and national levels. Poshan Tracker is working as an aid to Anganwadi Workers and is being leveraged for dynamic identification of stunting, wasting, and under-weight prevalence among children and last-mile tracking of nutrition service delivery.

Advanced Features of Poshan Tracker

  • POSHAN TRACKER DIGITAL PLATFORM: Before Poshan Tracker, Anganwadi Workers had to maintain 11 manual registers. This delayed decision-making and created service gaps. Home visits depended largely on individual knowledge and experience, leading to inconsistent assessments. 
  • There was also no beneficiary authentication system or integration with state and central schemes, reducing efficiency in addressing malnutrition.
  • Aadhaar-Based Verification: Prevents leakages, eliminates ghost entries and ensures benefit delivery only to registered beneficiaries.
  • Facial Recognition System (FRS): Integrated for last-mile tracking and service delivery authenticity.
  • IT-Enabled Home Visit Scheduler: Supports 23 structured home visits with auto-scheduling and age-appropriate counselling prompts. These include 4 visits during pregnancy, 4 in the first postpartum month, 7 from 2 months to 1 year, 5 from 1–2 years, and 3 from 2–3 years.
  • ECCE Content Delivery: Provides 249 videos, 190 voice notes, and 159 ECCE activity PDFs based on Aadharshila for children aged 3–6 years.
  • Poshan Calculator: Uses WHO Child Growth Standards to assess height, weight, age and gender, classifying children across stunting, underweight, wasting, SAM/MAM and overweight/obesity for standardised, accurate growth monitoring.
  • Poshan Helpline: Toll-free number 1515 for grievance registration.
  • Smartphone and Connectivity: All AWWs equipped with smartphones; internet connectivity charges at ₹2,000 per annum per AWW. Growth Monitoring Devices (GMDs) provided at each AWC.
  • These advanced features have enhanced the efficiency, consistency, and responsiveness of nutrition interventions at the grassroots level.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel