
8th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தாய்லாந்து நாட்டில் "தமிழி" எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு தங்க முத்திரை மோதிரம் கண்டெடுப்பு
- தாய்லாந்து நாட்டின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ளது டான்யாய் தாங் என்ற பகுதி.. இங்கு தொல்லியல் துறையினர் தீவிரமாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அப்போது அங்கு பழமையான ஒரு புதைவிடம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த புதைவிடத்தை முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தபோது, அங்கு வடகிழக்கு திசையில் தலை வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
- அவற்றுடன் சேர்த்து அந்தப் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. அதில் ஒரு தங்க மோதிரமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை உடனடியாக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.
- முதலில் பிராமி என்று தவறாகப் படிக்கப்பட்ட எழுத்துக்களை அது இடவல மாற்றமாக (Mirror Image எழுதப்பட்ட தமிழி எழுத்துக்கள்தான் என சிங்கப்பூர் சார் குழுவின் ரஞ்சித் குமார் கண்டறிந்துள்ளார்.
- அச்சிடுவதற்கு ஏதுவாக தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்த மோதிரத்தில் அளர் வைரதன் என்ற தமிழரின் பெயர் உள்ளது உறுதியாகியுள்ளது. 'அளர்' என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும். தமிழ் சொல் என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானத்துடன் கூடிய சதுர வடிவ படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 1930-ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆங்கிலேய அதிகாரியால் ரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
- மேலும், மதுரையிலிருந்து செங்கோட்டை கணவாய் வழியாக மேற்குக் கடற்கரைக்குச் சென்ற பண்டைய வர்த்தகப் பாதையில் இந்தப் பகுதி அமைந்திருந்ததால், சங்ககாலத்தில் இது முக்கிய வணிகத் தளமாக விளங்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- அகழாய்வில் இதுவரை வாழ்விடப் பகுதியும், ஈமப்பகுதியும் கண்டறியப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் மொத்தம் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் சான்றுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
- இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானம், கீழடி, அரிக்கமேடு, பட்டறைபெரும்புதூர், காவேரிப்பூம்பட்டினம், அழகன்குளம் உள்ளிட்ட முக்கிய சங்ககால அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவு மற்றும் அமைப்புடன் ஒத்துப்போகின்றன. இதன் அடிப்படையில் இந்தக் கட்டமைப்பு சங்ககாலத்தைச் சேர்ந்ததாக தமிழக தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- அகழாய்வின்போது 40 செ.மீ. நீளம், 20 செ.மீ. அகலம், 7 செ.மீ. கனமுடைய செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்புடன், கல்லால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைக் கொண்ட 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர வடிவ படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கிணற்றிற்குள் இறங்க கற்களால் அமைக்கப்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிணற்றின் சுவர்கள் செங்கற்களாலும், படிக்கட்டுகள் கற்களாலும் அமைக்கப்பட்டிருப்பது அக்கால கட்டுமானத் திறமையை வெளிப்படுத்துகிறது.

