
7th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு அரசுடன் ஹிட்டாச்சி நிறுவனம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்
- ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இக்குழுமத்தின் துணை நிறுவனங்கள் ஆகும்.
- இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மைய விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி திட்ட விரிவாக்கத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இதன் மூலம், 3 முதல் 5 ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் கூடுதலாக, ஆயிரம் நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002 பிரிவு 39-ன் கீழ், ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
- தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையப் பரிந்துரையின் அடிப்படையிலும், அந்த முன்மொழிவை முறையாகப் பரிசீலித்த பின்னரும், 2026 ஜூன் 19 அன்று இந்த நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக மத்திய அரசு அறிவித்தது.
- இந்த அறிவிப்பின் மூலம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்தியாவின் 21வது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாகிறது. இது நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பு, அறிவியல் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
- இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கௌரவித்துள்ளார்.
- இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
- இது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற நாடுகளால் வழங்கப்படும் 35வது சர்வதேச விருதாகும். இந்த நிகழ்வில் பேசிய மோடி, இன்று இந்தியா இந்தோனேசியா இடையிலான உறவில் பொற்காலம் தொடங்குகிறது.
- மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவிற்கும் இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 20 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முடிவுகள் இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பிரமோஸ் மற்றும் அஸ்த்ரா-MK1 ஆகிய ஏவுகணைகளை இந்தியாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தோனேசியத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியான 'யுபிஐ' பணப்பரிவர்த்தனை சேவைகளை இந்தோனேசியாவிலும் இணைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகள் மட்டுமன்றி கல்வி மற்றும் கடல்சார் கண்காணிப்பிலும் புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.
- இந்தியக் கல்வித் தரத்தை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக, இந்தோனேசியாவில் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் புதிய கிளை வளாகத்தைத் திறக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
- இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய மற்றும் இந்தோனேசியக் கடலோரக் காவல் படைகள் இணைந்து கூட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

