//
Type Here to Get Search Results !

3rd JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

3rd JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கு, பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், ஜூலை 3, 2026 அன்று, பாதுகாப்புப் படைகளுக்கான ரூ.52,000 கோடி மதிப்பிலான பல்வேறு கொள்முதல் திட்டங்களுக்கு தேவைக்கான ஒப்புதல் அல்லது கொள்கை அளவிலான நிர்வாக ஒப்புதலை வழங்கியது.
  • இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை, ஆளில்லா வான்வழி வாகன எதிர்ப்பு மின்னணு போர் முறைமையான 'ஆகாஷ் தரங்', கவச எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், தரையிலிருந்து விண்ணில் செலுத்தக்கூடிய நடுத்தர ஏவுகணை ஆயுத அமைப்பு, மிகக் குறைந்த தூர வான் பாதுகாப்பு அமைப்பு, பீரங்கிகளுக்கான செயலில் உள்ள பாதுகாப்பு அமைப்பு', ஜெட்-அடிப்படையிலான காமிகாஸ் வகை ட்ரோன் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • 'ஆகாஷ் தரங்' அமைப்பு ராணுவப் பிரிவுகளுக்கு பயனுள்ள ஆளில்லா விமான எதிர்ப்பு பாதுகாப்பை வழங்கும். கவச எதிர்ப்பு அமைப்பு, எதிரியின் எந்திரமயமாக்கப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ராணுவத்தின் திறனை மேம்படுத்தும். 
  • தரையிலிருந்து விண்ணில் செலுத்தக்கூடிய ஏவுகணை போன்ற பல்வேறு வகையான தொலைதூர வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக, நடுத்தர தொலைவிற்கான வான் பாதுகாப்பை வழங்குகிறது.
  • மல்டி-ஸ்பெக்ட்ரல் எனப்படும் பல்வேறு தொலையுணர் தொழில்நுட்பம் கொண்ட பாதுகாப்புத் தளவாடங்கள், இந்திய ராணுவத்தின் எதிர்-நடவடிக்கை திறன், செயல்திறனை மேம்படுத்தும். 
  • செயலில் உள்ள பாதுகாப்பு அமைப்பு பீரங்கிகளின் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி, போர்க்களத்தில் அவற்றின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும். 
  • ஜெட்-அடிப்படையிலான காமிகாஸ் ட்ரோன்கள், அதிக அழிவுத்திறன், செயல் திறனுடன் சிறந்த மின்னணு போர் திறனை வழங்குவதுடன், செலவு குறைந்த தளவாடங்களாகவும் உள்ளன.
  • இந்திய கடற்படையைப் பொறுத்தவரை, 'மல்டி இன்ஃப்ளுயன்ஸ் கிரவுண்ட் மைன்', கடற்படை கப்பல் சார்ந்த ஆளில்லா வான்வழி அமைப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்யவும், மின்சார உந்துவிசை அமைப்புக்கான தரைவழி சோதனை வசதியை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு, மேலாண்மை நிறுவனம் - நியூசிலாந்தின் மாஸ்ஸி பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழ் ஹரியானா மாநிலம் குண்ட்லியில் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு, மேலாண்மை நிறுவனம், நியூசிலாந்தின் மாஸ்ஸி பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்தம் 2026 ஜூலை 2 அன்று, அமைச்சகத்தின் செயலாளர் திரு. ஏ. பி. தாஸ் ஜோஷி, இணைச் செயலாளர் திரு. தேவேஷ் தேவல், அதன் இயக்குநர் டாக்டர் ஹரிந்தர் சிங் ஓபராய் தலைமையிலான மூத்த குழுவினர் முன்னிலையில் கையெழுத்தானது. 
  • உணவுத் தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள், மூன்றாம் தரப்பு நிதியுதவிக்கான கூட்டு விண்ணப்பங்கள், கருத்தரங்குகள், கல்விசார் கூட்டங்களில் பங்கேற்பு, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களிடையே கருத்துக் பரிவர்த்தனைகள், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் போன்றவை இதில் அடங்கும். 
  • இரு நிறுவனங்களையும் சேர்ந்த பிரத்யேக ஒருங்கிணைப்பாளர்கள், இந்தக் கூட்டு முயற்சிகளைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
  • இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லதக்கதாகும். இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 
  • மேலும், இந்த ஒப்பந்தம், அறிவுசார் சொத்து உரிமைகளைப் பாதுகாப்பதுடன், எதிர்காலக் கல்விசார் ஓத்துழைப்புக்களை வளர்ப்பதற்கான சட்டரீதியிலான கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. 
  • இந்தக் கூட்டு முயற்சியானது சர்வதேசக் கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உணவுத் தொழில்நுட்பம், பதப்படுத்துதலில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், அத்துடன் இரு நிறுவனங்களின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel