
31st JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 8வது நாள்
- 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான ஜூலை 30 அன்று, இந்தியா மேலும் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
- இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 17 ஆக (3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) உயர்ந்துள்ளது.
- ஆண்களுக்கான +110 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தினார்.
- இதையடுத்து நடைபெற்ற மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சீமா வெண்கலப் பதக்கம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் வீசி அவர் இந்த பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026', எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
- தற்போது நடைமுறையில் உள்ள 1969-ஆம் ஆண்டின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்புகளை உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், தாமதமான பதிவுகளுக்கான நடைமுறைகளைக் கடுமையாக்கவும் வழிவகை செய்கிறது.
- 1 முதல் 2 ஆண்டுகள் தாமதம்: ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 ஆண்டுக்கு மேலாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தால், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் (Executive Magistrate) ஒப்புதலுக்குப் பிறகே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம்: நிகழ்வு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானால், நீதித்துறை நடுவரின் (Judicial Magistrate) நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
- இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள் குடிமக்களின் முக்கியமான சட்டப்பூர்வ அடையாளமாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்திற்கு, ரூ.36,441 கோடி ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டில், விரிவாக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்திற்கும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இது, இளைஞர் மேம்பாட்டுக்காகவும், விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காகவும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
- சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் மிகவும் லட்சியமிக்க விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் இதுவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து, நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, விளையாட்டு அறிவியல் ஆதரவு, நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சமுத்திர மந்தன் திட்டம் மூலம் 600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான ஆற்றல் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி (பிரதமரின் கிசான் திட்டம்) திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) தொடர, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வளமே நாட்டின் வளத்திற்கு அடிப்படை என்ற அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
- இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்படைத்தன்மையுடன் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
- 23-வது தவணையில் மட்டும் ரூ.18,984 கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டு 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்ததுள்ளனர்.
- கொவிட் காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி உதவி வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகளில் நான்கு பேரில் ஒருவர் பெண் விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

