//
Type Here to Get Search Results !

2nd JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

2nd JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட தரமான அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ், மேம்படுத்தப்பட்ட தரமான அரிசி வழங்குவதற்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் சிறந்த தரமான அரிசி பெறவுள்ளனர்.
  • கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக பொது விநியோக முறையில் வழங்கப்படும் அரிசிக்கான தரக்குறியீட்டை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது. இதன்மூலம் பயனாளிகளுக்கு உணவுப்பொருள் வழங்கும்போது, உடைந்த தானியத்தின் அளவு கணிசமான குறைவது உறுதி செய்யப்படும்.
  • பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் பச்சரிசியில் தற்போது 25 சதவீதமாக உள்ள உடைந்த தானிய அளவு 10 சதவீதமாக குறைக்கப்படும். இதேபோல் புழுங்கல் அரிசியில் 16 சதவீதமாக உள்ள உடைந்த தானிய அளவு 5 சதவீதமாக குறைக்கப்படும்.
  • மேம்படுத்தப்பட்ட தரம் உள்ள அரிசி கொள்முதல் உடனடியாக தொடங்கப்பட்டு படிப்படியாக 2027-28 கஃரீப் சந்தைப் பருவத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 
  • இந்தத் திட்டத்தின் முன்னோட்டம் ஹரியானா, ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, தெலங்கானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும்.
இந்திய - ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
  • இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 
  • டெல்லியில் இன்றுநடைபெற்ற 16-ஆவது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இந்த உச்சிமாநாட்டின் மிக முக்கிய அம்சமாக, இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் தூய்மையான எரிசக்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு பிரம்மாண்ட கூட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் 1,000 உயிரி-வாயு மற்றும் இயற்கை உர ஆலைகளை அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டுள்ளது. ஜப்பானின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி முதலீட்டுடன் இந்த ஆலைகள் நிறுவப்பட உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel