//
Type Here to Get Search Results !

29th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

29th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நிறைவேற்றம்
  • தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1971-ன் படி தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • இந்த குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அதன்படி கடந்த 24-ஆம் தேதி ''தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புக்கு இடையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்து வைத்தார்.
  • கடந்த இரண்டு நாட்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் இன்று இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • இதனையடுத்து இச்சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவின் மூலம் இனி வந்தே மாதரம் பாடல் பாடப்படும் போது இடையூறு செய்வது அல்லது அவமதிப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இந்த குற்றத்திற்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026ஐ நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கடந்த 27ஆம் தேதி அறிமுகத்தினார். 
  • இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேலும், தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
  • இன்றும் (29-07-26) விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த குரல் வாக்கெடுப்பில் மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர். 
  • அதனை தொடர்ந்து, 'பொதுத் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026' நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 
23வது காமன்வெல்த் போட்டி - 6வது நாள்
  • 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர்.
  • இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 6ம் நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங், வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.
  • குல்வீர் சிங் பந்தய தூரத்தை 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் (27:49.78) கடந்து 2வது இடத்தைப் பிடித்தார்.
  • காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
  • பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 69 கிலோ எடை பிரிவில் களம் இறங்கிய அவர், ஸ்நாட்ச் பிரிவில் 101 கிலோ , கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 126 கிலோ என மொத்தம் 227 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார்.
  • 6ம் நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து , நைஜிரியா முறையே 2 முதல் 5வது இடங்களிலும் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel