
29th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நிறைவேற்றம்
- தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1971-ன் படி தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாகும்.
- இந்த குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அதன்படி கடந்த 24-ஆம் தேதி ''தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புக்கு இடையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்து வைத்தார்.
- கடந்த இரண்டு நாட்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் இன்று இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இதனையடுத்து இச்சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- இந்த மசோதாவின் மூலம் இனி வந்தே மாதரம் பாடல் பாடப்படும் போது இடையூறு செய்வது அல்லது அவமதிப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இந்த குற்றத்திற்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
- பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026ஐ நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கடந்த 27ஆம் தேதி அறிமுகத்தினார்.
- இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும், தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
- இன்றும் (29-07-26) விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த குரல் வாக்கெடுப்பில் மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.
- அதனை தொடர்ந்து, 'பொதுத் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026' நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர்.
- இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 6ம் நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங், வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.
- குல்வீர் சிங் பந்தய தூரத்தை 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் (27:49.78) கடந்து 2வது இடத்தைப் பிடித்தார்.
- காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
- பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 69 கிலோ எடை பிரிவில் களம் இறங்கிய அவர், ஸ்நாட்ச் பிரிவில் 101 கிலோ , கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 126 கிலோ என மொத்தம் 227 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார்.
- 6ம் நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து , நைஜிரியா முறையே 2 முதல் 5வது இடங்களிலும் உள்ளன.

