
28th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வருவாயை உயர்த்த மாண்டேக் சிங் தலைமையில் குழு அமைப்பு தமிழக அரசு அறிவிப்பு
- தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார்.
- இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.
- மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
- இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- தடகளம் - மகளிர் குண்டு எறிதல் F57 பிரிவில் ஷர்மிளா தங்கர் தங்கம், ஷில்பா ஷைலா வெண்கலம் வென்றனர்.
- பளுதூக்குதல் - ஆடவர் 79 கிலோ இறுதிப் போட்டியில் வி. அஜய் பாபு வெள்ளி வென்றார்.
- தடகளம் - ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளி வென்றார்.
- பளுதூக்குதல் - மகளிர் 53 கிலோ பிரிவில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளி வென்றார்.
- பளுதூக்குதல் - மகளிர் 58 கிலோ பிரிவில் பிந்தியாராணி தேவி வெண்கலம் வென்றார்.
- பதக்கப் பட்டியலில் 59 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 32 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 21 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளன.
- 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

