
17th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் சேவையை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
- 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலை பயணிகள் பயன்பாட்டிற்க்காக பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார். துவக்க விழாவில் பிரதமர் மோடியுடன் ஹரியானா முதல்வர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த ரயிலின் முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்தனர். கார்பன் உமிழ்வை முற்றிலும் பூஜ்ஜியமாக (Zero Carbon Emission) குறைக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- டீசல் ரயில்களுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், கார்பன் உமிழ்வை (Carbon Emission) பூஜ்ஜியமாகக் குறைக்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ரயில் இயக்கத்தின் போது நீரும், நீராவியும் மட்டுமே வெளியேறும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான மாசும் ஏற்படாது.

