//
Type Here to Get Search Results !

16th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

16th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கீழடியில் ஒரே குழியில் 3 வகையான பண்டைய வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு
  • கீழடியில் இதற்கு முந்தைய அகழாய்வுப் பணிகளின் போது தனித்தனியாகக் கண்டறியப்பட்ட மூன்று வெவ்வேறான வடிகால் அமைப்புகள், தற்பொழுது நடைபெற்று வரும் அகழாய்வில் முதன்முறையாக ஒரே குழியில், அதுவும் மூடிய நிலையில் கண்டறியப்பட்டுத் தொல்லியல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
  • செங்கல் வடிகால் அமைப்பு, சுருள் வடிவக் குழாய் வடிகால், பீப்பாய் வடிவக் குழாய் வடிகால் என மூன்று வகைகளில் அமைக்கப்பட்டுள்ளது. 
  • ஒரே இடத்தில் இந்த மூன்று அமைப்புகளும் இணைந்தவாறு கண்டறியப்பட்டிருப்பது, சங்க கால மக்களின் மேம்பட்ட நகரமைப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கு மிக வலுவான சான்றாக அமைந்துள்ளதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  • கழிவுநீர் வெளியேறும் பாதையை மூடிய அமைப்பாக வடிவமைத்திருப்பது, அக்கால மக்கள் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 
  • வெவ்வேறு வடிவக் குழாய்களை ஒரே வடிகால் அமைப்பில் இணைத்துப் பயன்படுத்தியிருப்பது, 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பெற்றிருந்த சிறந்த பொறியியல் அறிவை வெளிப்படுத்துகிறது.
உலகளாவிய அறிவு வளங்களுக்கான அணுகலை வலுப்படுத்த என்ஐஎஸ்சிபிஆர் மற்றும் சிஜிபிடிடிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
  • உயர்தர அறிவியல், தொழில்நுட்ப, அறிவுசார் சொத்துரிமைத் தகவல்களுக்கான அணுகலை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகமான சிஜிபிடிடிஎம்-மும் (CGPDTM), சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான என்ஐஎஸ்சிபிஆர்-ம் (CSIR-NIScPR) தேசிய அறிவு வள கூட்டமைப்பில் (NKRC- என்கேஆர்சி) பங்கேற்பதற்காக இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இரு அமைப்புகளின் செயல்பாடுகளையும், உலகத் தரம் வாய்ந்த அறிவியல், தொழில்நுட்பத் தகவல் வளங்களைத் தடையின்றி அணுகுவதில் என்கேஆர்சி-யின் பங்கையும் எடுத்துரைக்கும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
  • இரு முதன்மை அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை இந்தப் புரிந்துணர் ஒப்பந்தம் குறிக்கிறது. 
  • இந்த ஒத்துழைப்பானது, உலகளாவிய அறிவு வளங்களுக்கான அணுகலை வலுப்படுத்தி, அறிவுசார் சொத்துரிமை நிர்வாகத்திற்கான ஆதரவை மேம்படுத்தி, தரமான அறிவியல் தகவல்கள் மூலம் முடிவெடுப்பதை எளிதாக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel