//
Type Here to Get Search Results !

15th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

15th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 62,500 கோடி  நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு மதிப்புகூட்டு நடைமுறைகளை வலுப்படுத்தவும், விநியோகச் நடைமுறைகளை உறுதிப்படுத்தவும், உலகளாவிய, போட்டித்தன்மையை மேம்படுத்தவும், மொபைல் சாதன உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு நிலையை அடைதல், பெரும் பொருளாதார மதிப்பை ஈட்டுதல், வடிவமைப்பு,  ஆராய்ச்சி & மேம்பாடு ஆகியவற்றில், இந்திய காப்புரிமைகளை உருவாக்குதல் ஆகிய அம்சங்களையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். அதாவது 2026-27-ம் நிதியாண்டு முதல் 2030-31-ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இந்தியாவில் மொபைல் சாதன உற்பத்திக்குத் தகுதியான விற்பனையின் அடிப்படையில், 2.25% முதல் 5% வரையிலான மாறுபட்ட விகிதங்களில் இத்திட்டம் ஊக்கத்தொகை ஆதரவை வழங்குகிறது. 
  • முக்கிய உதிரி பாகங்கள் அல்லது துணை பாகங்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கு, 1.5% வரை கூடுதல் ஊக்கத்தொகையையும் இத்திட்டம் வழங்குகிறது. இந்திய வர்த்தக முத்திரை உருவாக்குவதற்காக, தயாரிப்பின் வடிவமைப்பு, ஆராய்ச்சி & மேம்பாடு சார்ந்த தகுதியான விற்பனைக்கு 3% கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
'செமிகான் 2.0' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
  • இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,27,500 கோடி மதிப்பிலான, 'செமிகான் 2.0' திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு தொடர்ச்சியான,  நீண்டகால ஆதரவு தேவை என்பதை கருத்தில் கொண்டும்  'செமிகான் 1.0' திட்டத்தின் மூலம் ஏற்பட்ட விரைவான  உற்பத்தித் திறனை  தக்க வைத்து கொள்வதற்கும், உலகளவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதை 'செமிகான் 2.0' நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 'செமிகான் 2.0' திட்டம் பின்வரும் ஆறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழல் அமைப்பை முழுமையாகக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
  • 'செமிகான் 2.0' திட்டம், சிப் வடிவமைப்பில் ஏற்கனவே கிடைத்துள்ள தொடக்க நிலை வெற்றியை  விரிவுபடுத்த உதவிடும். ஏற்கனவே 105 புத்தொழில் நிறுவனங்கள் சிப் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வடிவமைப்புச் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். 
  • மேலும், உத்திசார் மற்றும் வணிக ரீதியான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான முக்கியக் கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்முறையைப் பின்பற்றி அறிவுசார் சொத்துக்கள், சிப் வடிவமைப்புகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதே 'செமிகான் 2.0'-ன் நோக்கமாகும்.
ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் ரூ.3,907 கோடி செலவில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பாரதீப் – ஹரிதாஸ்பூர் இடையே இரட்டை வழிப்பாதை அமைப்பதற்கும் ராஜ்கர்சவான் – தன்கோவாபோஸி இடையே 4-வது வழித்தடம் அமைப்பதற்கும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 145 கிமீ அளவிற்கு அதிகரிக்கும். இந்தப் பல்தடத்திட்டம் சுமார் 14 லட்சம் பேர் வசிக்கும் 1,526 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும்.
  • லலித்கிரி புத்தவளாகம், ஸ்ரீ பாலதேவ்ஜீவ் கோவில், மேகஹத்துபுரு ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்களுக்கு ரயில்  போக்குவரத்து இணைப்பிற்கு வழிவகுக்கும்.
  • இத்திட்டங்கள், நிலக்கரி, இரும்புத்தாது, டோலமைட், சுண்ணாம்புக்கல், ஜிப்சம் போன்ற சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடங்களாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 44 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்து நடைபெறும்.
உத்தரப்பிரதேசத்தில் ரூ.14,447.64 கோடி செலவில் என்எச்-19-வாரணாசி வட்டச்சாலை இடையே உயர்த்தப்பட்ட 6 வழித்தடங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் என்எச்-19 - வாரணாசி வட்டச்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் வழித்தடத்தை அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்வைக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • கங்கை நதிக்கரையோரம் போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், 46.039 கிமீ தொலைவிலான இத்திட்டத்தில் 6 வழித்தடங்களைக் கொண்ட உயர்மட்ட முக்கியச் சாலை மேம்பாலம், வளைவுப் பாதைகள், இணைப்புச் சாலைகள், உள்ளிட்டவை இதில் அமைக்கப்பட உள்ளது. 
  • இத்திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.14,447.64 கோடியாகும்.  இதில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ.6,037.85 கோடியும் நிலம் கையகப்படுத்துதலுக்கான  செலவு ரூ.541.11 கோடியாகும்.
  • இத்திட்டம் என்எச்-19 – வாரணாசி வட்டச்சாலை இடையே தடையற்ற போக்குவரத்து வசதியை அளிக்கும். அத்துடன் நகரப் போக்குவரத்தில் உள்ள நெரிசலைக் குறைத்து போக்குவரத்தை மேம்படுத்தும். 
  • மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பயண நேரத்தை 60 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்எச்-19 - காசி ரயில் நிலையம் இடையேயான பயண நேரம் 50 நிமிடங்களிலிருந்து 25 நிமிடங்களாகக் குறையும்.
உத்தரப்பிரதேசத்தில் வருணா நதிக்கரையையொட்டி ரூ.10,998.32 கோடி செலவில் 6 / 4 உயர்த்தப்பட்ட வழித்தடம், வளைவுகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வருணா நதிக்கரையையொட்டி என்எச் 31 வாரணாசி வட்டச்சாலையை இணைக்கும் 43.218 கிமீ தொலைவிலான வழித்தடம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
  • இந்தத் திட்டம் வளைவுப் பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கியமான 6 / 4 உயர்த்தப்பட்ட வழித்தட திட்டமாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10,998.32 கோடியாகும். 
  • இதில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ.4,565.33 கோடியாகவும், நிலக் கையகப்படுத்துதலுக்கான   செலவு ரூ.934.91 கோடியாகவும் இருக்கும்.
  • இந்த வழித்தடம் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முக்கிய திட்டமாகும். இது என்எச் 31 - காசி ரயில் நிலையம் இடையே தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துவதோடு வாரணாசி வட்டச்சாலை, வாரணாசி விமான நிலையம், காசி ரயில் நிலையம், வாரணாசி நகர ரயில் நிலையம், வாரணாசி சந்திப்பு, தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு, ராம்நகர் துறைமுகம், சம்பூர்ணானந்த்  சமஸ்கிருத பல்கலைக்கழகம், வாரணாசி படித்துறை, சந்தௌலி பிராந்தியத்தையொட்டிய பகுதிகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியை எளிமைப்படுத்தும்.
தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
  • தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கை குறித்த உரத் துறையின் முன்மொழிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கொள்கை, நாட்டில் எரிவாயு அடிப்படையில் (யூரியா) உர உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான புதிய முதலீடுகளை ஊக்குவிக்க வகை செய்கிறது. 
  • இது தற்சார்பு நிலையை அடைவதற்கான இலக்கை எட்ட உதவிடும். மேலும், புதிய முதலீட்டுக் கொள்கை-2012 உடன் ஒப்பிடுகையில், இதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
  • அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நிலையான, மாறுபடும் செலவுகள் என்ற வகைப்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. 12% குறைந்தபட்ச, 16% அதிகபட்ச உச்ச வரம்புடன் கூடிய பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய அந்நியச் செலாவணி விகிதங்களின் அடிப்படையில், நிலையான செலவை, இந்திய ரூபாயாக மாற்றுவதன் மூலம், அந்நியச் செலாவணியால் ஏற்படும் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 
  • யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கையின் கீழ் நிறுவப்படும் ஒவ்வொரு உற்பத்தி ஆலைக்கும் ரூ.250 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel