//
Type Here to Get Search Results !

13th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

13th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறை வாரியங்களின் தலைவர்கள் மாற்றப்பட்டு வரும் வேளையில் இந்த முக்கிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களிடம் இருந்து புதிய பொறுப்பிற்கான நியமன ஆணையை லயோலா மணி முறைப்படி பெற்றுக் கொண்டார்.
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி, இப்பதவியில் அடுத்த 3 ஆண்டுகள் நீடிப்பார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு
  • மத்திய அரசு தரவுகளின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, ஜூன் மாதம் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே மே மாதத்தில் 3.93 சதவீதமாக இருந்தது.
  • நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.32 சதவீதமாக இருந்தது. இதுவே மே மாதத்தில் இருந்த 4.78 சதவீதத்தை விட அதிகமாகும்.
  • இதற்கிடையில், மொத்த பணவீக்கத்தை 4 சதவீத அளவில் பராமரிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது
  • தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. டெல்லியில் 60ஆவது ஞானபீட விருது விழாவில் முன்னாள் அமைச்சர் கரன் சிங், வைரமுத்துவுக்கு விருதை வழங்கினார்.
  • ரூ.11 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் வாக்தேவியின் வெண்கலச் சிலையை உள்ளடக்கியது இவ்விருது. கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னர் சாம்பியன்
  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் உடன் சின்னர் பலப்பரீட்சை மேற்கொண்டார். 
  • உலக டென்னிஸ் வீரர்களுக்கான (ஆடவர்) தரவரிசையில் சின்னர் முதலிடத்திலும், ஸ்வெரேவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
  • பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார் சின்னர். இதன் மூலம் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் தக்கவைத்தார்.
  • கடந்த 25 ஆண்டுகளில் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், அல்கராஸ் ஆகியோருக்கு அடுத்ததாக விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த நான்காவது வீரர் ஆனார் ஜன்னிக் சின்னர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel