//
Type Here to Get Search Results !

11th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

11th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
  • அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது.
  • இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மாநிலங்களின் மாநிலப் பாடலுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • அதனைத் தொடர்ந்து, நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் நிறைவாக, இறுதிப் பகுதியாக தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
  • தேசியப் பாடல், தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இந்த புதிய வரிசை முறையை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் மத்திய அமைச்சகங்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் தவறாமல் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. 
  • இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
  • இரு பிரதமர்களும் நேரடியான, தூதுக்குழு அளவிலான வடிவங்களில் விரிவான இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, வேளாண் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா, கலாச்சாரம், மக்களுக்கு இடையே உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருந்தன. 
  • இருதரப்பு உறவை உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது இந்தியா-நியூசிலாந்து உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. 
  • பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். 
  • இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இரு பிரதமர்களும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்தனர். 
  • பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.
  • பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, பால்வளம், சுற்றுலா, கடல்சார் பாரம்பரியம், கலாச்சாரம், உணவுத் தொழில்நுட்பம், கடல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.  இருதரப்பு ஒத்துழைப்புக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஒரு கூட்டறிக்கையையும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பல் கடற்படையில் இணைப்பு
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (ஜூலை 11) நடைபெற்ற விழாவில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேம்பட்ட மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் மகேந்திரகிரி' கிழக்கு கடற்படையில் இணைக்கப்பட்டது. 
  • ‘ஐஎன்எஸ் மகேந்திரகிரி’ என்பது, வெறும் ஒன்றரை ஆண்டுகளில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் ஆறாவது ப்ராஜெக்ட் 17A உள்நாட்டு மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலாகும். 
  • இந்தத் தொடரின் முதல் கப்பலான ‘ஐஎன்எஸ் நீலகிரி’ 2025 ஜனவரியில் சேவையில் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ‘ஐஎன்எஸ் உதயகிரி’ மற்றும் ‘ஐஎன்எஸ் ஹிம்கிரி’ ஆகஸ்ட் மாதத்திலும், ‘ஐஎன்எஸ் தரகிரி’ இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், ‘ஐஎன்எஸ் துனகிரி’ கடந்த மாதமும் சேவையில் சேர்க்கப்பட்டன. 
  • இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையைச் சேர்ந்த மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், கடற்படை வான் பாதுகாப்பு, மேற்பரப்புப் போர், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர், கடல்வழித் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) உள்ளிட்ட முழு அளவிலான கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel