//
Type Here to Get Search Results !

10th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

10th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ரூ. 850 கோடியில் அடிடாஸ் நிறுவனத்தின் தோல் இல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார் 
  • கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்காக ரூ.850 கோடி முதலீட்டில் 6,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தோல் இல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • கரூர் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனத்திற்கான தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்திடும் வகையில், ரூ. 850 கோடியில், 6,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
  • இதன்மூலம், உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படுவது மட்டுமின்ற இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்திடும்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ஆஸ்திரேலியா நாட்டிற்கு அரசு முறை மேற்கொண்டார். அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களிலும் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். 
  • மேலும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், இணையம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விண்வெளி, அணுசக்தி, தூய்மை எரிசக்தி, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
  • தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
  • அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராணுவம் மற்றும் ஒத்துழைப்புக் குறித்த கூட்டுத் தீர்மானம், கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை, எரிசக்தி பாதுகாப்பு குறித்த இந்தியா - ஆஸ்திரேலியா கூட்டறிக்கை, இந்தியா - ஆஸ்திரேலியா சிவில் அணு ஒப்பந்தத்தின் நிர்வாக ஏற்பாடுகளை இறுதி செய்தல், இணையம், முக்கியத் தொழில்நுட்பங்கள், விநியோக முறைகளுக்கான ஆஸ்திரேலியா - இந்தியா கூட்டாண்மை ஆகிய உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel