8th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு
- உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே மாதம் வரையான காலத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி சுமார் 15 சதவீத வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
- கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததன் விளைவாக, ஏப்ரல் மாத ஏற்றுமதி 13.78 சதவீதம் அதிகரித்து 43.56 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததுள்ளது.
- இது கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஏற்றுமதி அளவாகும். இருப்பினும், இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை 28.38 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

