
28th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் நரேந்திர மோடிக்கு செஷல்ஸ் நாட்டில், உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
- செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, சுற்றுச் சூழல் பாநுகாப்புக்கான அந்நாட்டின் உயரிய விருதான "Guardian of the Blue Horizon" என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இன்று (28.06.2026) வழங்கி கௌரவித்தார்.
- பிரதமரின் பசுமை செயல்பாடுகள், வளரும் நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், நீலப் பொருளாதாரம், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், கடல் வளங்களின் நிலையான மேலாண்மை, சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- சவாரி அழைப்பு செயலியான இது ஓலா, உபெர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத் டாக்ஸியை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
- கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், 'அமுல்' பால் கூட்டுறவு மாதிரியின் அடிப்படையில் ஒரு கூட்டுறவு கட்டமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.
- இந்த புதிய மாற்று வழிமுறையானது, வாடிக்கையாளரோ அல்லது சேவை வழங்குநரோ (ஓட்டுநரோ) எந்தவொரு சுரண்டலையும் எதிர்கொள்ளாத ஒரு நியாயமான அமைப்பை உறுதி செய்யும்.

