
26th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டெல்லியில் தமிழ்நாட்டு அரசின் சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் கே.நாராயணா நியமனம்
- கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனரும், முதல்வர் விஜய்க்கு நெருக்கான நண்பர்களுள் ஒருவராகவும் இருப்பவர் வெங்கட் கே.நாராயணன்.
- இவர், தற்போது இவர் டெல்லியில் தமிழ்நாட்டின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ஓராண்டுக்கு தற்காலிக முறையில் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமியிலான அரசின் பரிந்துரையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
- ஹெர்பாலைஃப், ஐஐடி மெட்ராஸ் இணைந்து, இந்தியாவின் முதல் தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்திற்கான உயர்சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது.
- இதன் மூலம் தாவர அடிப்படையிலான ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை ஐஐடி ஹெர்பாலைஃப் இண்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் 'ஹெர்பாலைஃப்- ஐஐடி மெட்ராஸ் உயர் சிறப்பு மையத்தைத் (Centre of Excellence on Plant Cell Fermentation Technology) தொடங்கியுள்ளது.
- இதன் மூலம் தாவரங்களிலிருந்து உடல்நலத்திற்கான தேவையான பொருட்கள் உருவாக்கப்படவுள்ளது. தாவர செல் நொதித்தலைப் பொறுத்தவரை பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவிலேயே இதுதான் முதலாவது பிரத்யேக ஆய்வகமாகும்.
- வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம் கடந்த ஜூன் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.
- தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தில் நிலையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான தேசிய மையமாக இதனை திகழ் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

