//
Type Here to Get Search Results !

22nd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

22nd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் 1091 என்ற இலவச பிரத்யேக உதவி எண் அறிமுகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் 1091 என்ற இலவச பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த எண் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
  • இந்த உதவி எண் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வகையான குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து நேரடியாக புகார் அளிக்க முடியும். 
  • குறிப்பாக வன்கொடுமை, பாலியல் தொந்தரவு, பின்தொடர்தல் (Stalking), மிரட்டல், இணையவழி துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி காவல் உதவியைப் பெற இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம்.
  • மேலும், அவசரகால சூழ்நிலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயிற்சி பெற்ற காவலர்கள் இந்த சேவையை 24 மணி நேரமும் கண்காணித்து செயல்படுத்த உள்ளனர். 
  • புகார் பெறப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
  • இங்கிலாந்து நாட்டில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியானது கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் வேட்பாளராக கொண்டு தேர்தலை சந்தித்தது. 
  • தேர்தலில் தொழிலாளர் கட்சியானது 411 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
  • தொடர்ச்சியான சர்ச்சைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் சரிந்துவரும் மக்கள் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, ஸ்டார்மரின் பதவி கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருந்து வந்தது.
  • 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய தேர்தல் வாக்குறுத்திகளை ஸ்டார்மர் நிறைவேற்ற தவறிவிட்டதாக, தொழிலாளர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
  • இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி 2026
  • சீனாவின் குயாங் நகரில் சர்வதேசக் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
  • இன்று மதியம் நடைபெற்ற மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோதி உஸ்பெகிஸ்தான் நாட்டின் முன்னணி வீராங்கனையான பர்ஜோனா போஜிலோவாவை எதிர்கொண்டார்.
  • நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி 5-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி ஜோதி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • 51 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி போராடி வெள்ளிப் பதக்கம் வென்றார். பிராச்சி 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் தீவிரமாகப் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 70 கிலோ எடைப்பிரிவில் தீபக் இறுதிச் சுற்று வரை சென்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • உலகக் கோப்பை குத்துச்சண்டை அரங்கில் 1 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை வென்று இந்தியக் குத்துச்சண்டைக் கூட்டணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel