
21st JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
3 அதிநவீன போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- மத்திய அரசின், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் என்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 3 அதிநவீன போர்க் கப்பல்களையும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட 3 முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.
- இந்த கப்பல்கள், கடற்சார் போர், நீரியல் அளவீடு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் ஆகிய துறைகளில் முக்கிய செயல்பாட்டு திறன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
- மேலும் இந்த கப்பல்களின் கட்டுமானத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

