//
Type Here to Get Search Results !

17th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

17th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜி7 (G7) உச்சி மாநாடு 2026
  • உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர்.
  • இந்த அமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • இவர்களுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விடுத்த சிறப்பழைப்பை ஏற்று, G7 அல்லாத நாடுகளின் தலைவர்களான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மற்றும் கென்ய அதிபர் வில்லியம் ருட்டோ ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
  • ஏவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் நடந்த 52ஆவது G7 மாநாட்டு அரங்குக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் கைகுலுக்கி ஆரத்தழுவி வரவேற்றார். 
  • மாநாட்டு அரங்கிற்குள் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டதோடு, அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியின் தோளைத் தட்டி தனது நட்பை வெளிப்படுத்தினார்.
  • பின்னர், புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பிலான அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். 
  • அதைத் தொடர்ந்து ஜி7 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளையொட்டி உலகத் தலைவர்கள் பாரம்பரிய முறைப்படி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 
  • அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோருடன் முதல் வரிசையில் பிரதமர் மோடி இடம்பிடித்திருந்தார். ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது இது 13-வது முறையாகும். 
  • மேலும், அவர் தொடர்ந்து 7-வது முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel