//
Type Here to Get Search Results !

13th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

13th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

11வது கட்ட கீழடி அகழாய்வில் இரும்பு உலைக்கலன் கண்டுபிடிப்பு
  • கீழடியில் நடைபெற்று வரும் 11-வது கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்களும், சுவடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 
  • அதுமட்டுமன்றி இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்களும் தென்படுகின்றன. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 9 அகழாய்வு குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
  • அதன் ஒரு பகுதியாக தற்போது பழங்கால உலைக்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலைக்கலன் இரும்பு தாதுக்களை உருக்கி தங்களுக்கு தேவையான வடிவத்திற்கு ஏற்றவாறு உருக்கி பயன்படுத்தி வந்துள்ளனர். 
இந்திய புதிய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்
  • தற்போதைய ராணுவத் தளபதியாக இருக்கும் ஜெனரல் உபேந்திர திவேதி, நடப்பு மாதம் ஜூன் 30-ஆம் தேதியுடன் தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெறுகிறார். 
  • இதனைத் தொடர்ந்து, ஜூன் 30-ஆம் தேதி பிற்பகல் முதல் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
  • தேசியப் பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான தீரஜ் சேத், கடந்த 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தின் கவசப் படையில் தனது பணியைத் தொடங்கினார். 
  • கடந்த 40 ஆண்டுகால ராணுவ சேவையில், பல்வேறு சவாலான எல்லைப் பகுதிகளில் மிக முக்கியப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய அனுபவம் இவருக்கு உண்டு.
எதிரி நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் 3 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
  • ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., கடந்த 10ம் மற்றும் 11ம் தேதிகளில் அடுத்த தலைமுறை பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு திறன்களை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்தது. 
  • இந்த சோதனையின் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமையை இந்தியா உலகிற்கு நிரூபித்துள்ளது.
  • வான்வெளியின் உள்ளேயும், வெளியேயும் பாய்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் மூன்று தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. 
  • இதன் மூலம் சர்வதேச அளவில் மிகச்சில நாடுகள் மட்டுமே கொண்டுள்ள அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. 
  • தற்போது 'மிஷன் சுதர்சன் சக்ரா' என்ற வியூகத்தின் கீழ் நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புகளை பாதுகாக்க கவசமாக இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel