
14th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கற்கால ஆயுதம் கண்டெடுப்பு
- பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர் பிரதாப் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்றை கண்டெடுத்தார்.
- கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த பழைய கற்கால கருவி சுமார் 7.8 செ.மீ நீளமும் , 5.7 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.
- கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கல் ஆயுதம் மேலை பழங்கற்காலத்தை சேர்ந்த சுரண்டும் வகையைச் சேர்ந்த பழங்கால கல் ஆயுதமாகும். இதன் காலம் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.
- நாட்டின் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட (அடிப்படை ஆண்டு: 2011-12) வருடாந்திர பணவீக்க விகிதம், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் (2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில்) 8.3 சதவீதமாகப் (தற்காலிகம்) பதிவாகியுள்ளது.
- 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க விகிதம் நேர்மறையாக இருப்பதற்கு, கனிம எண்ணெய், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உலோகங்கள், பிற உற்பத்தி மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலையேற்றமே முதன்மையான காரணமாகும்.
- 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டில், மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் 3.86 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
- முதன்மைப் பொருட்கள் (எடையளவு 22.62%): இப்பிரிவிற்கான குறியீட்டு எண், மார்ச் 2026-ல் 197.3 ஆக (தற்காலிகம்) இருந்த நிலையில், ஏப்ரல் 2026-ல் 2.58% உயர்ந்து 202.4 ஆக (தற்காலிகம்) அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (16.42%), உணவுப் பொருட்கள் (1.41%), கனிமங்கள் (0.91%) ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களின் விலை (0.94%) குறைந்துள்ளது.
- எரிபொருள் மற்றும் மின்சக்தி (எடையளவு 13.15%) இப்பிரிவிற்கான குறியீட்டு எண், 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 153.7-மாக (தற்காலிகம்) இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18.22%-ம் உயர்ந்து 181.7-ஆக (தற்காலிகம்) அதிகரித்துள்ளது. மார்ச் 2026-உடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில், கனிம எண்ணெய்களின் விலை (29.37%) உயர்ந்துள்ளது. அதேவேளையில், மின்சாரத்தின் விலை (-2.53%) குறைந்துள்ளது.
- உற்பத்திப் பொருட்கள் (எடையளவு 64.23%) இப்பிரிவிற்கான குறியீட்டு எண், மார்ச் மாதம் 149.5-ஆக (தற்காலிகம்) இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 1.40%-ஆக உயர்ந்து 151.6-ஆக (தற்காலிகம்) அதிகரித்துள்ளது. விலைகளில் மாதந்தோறும் அதிகரித்துள்ள சில முக்கியக் குழுக்கள்: அடிப்படை உலோக உற்பத்தி, இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள், ஜவுளி, உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை ஆகும்.
- அகமதாபாத்தில் உள்ள காந்தி நகரில் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் இரண்டையும் சேர்த்து மொத்தம் 194 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
- சீன வீராங்கனையான ஜின்லான் ஜாவோ 216 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கமும், வியட்நாமை சேர்ந்த ஹோய் ஹுவாங் நுயென் 195 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

