
13th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதுச்சேரியில் 5வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் ரங்கசாமி
- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி 5 வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது. அடுத்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன.
- முதலமைச்சராக ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் செய்து வைத்தார்.
- "கடவுளின் பெயரால்" எனக் கூறி ரங்கசாமி பதவி ஏற்று கொண்டார். 9.47 மணி ஆகும் வரை காத்திருந்து கையெழுத்திட்டார். முதலமைச்சருடன் பாஜக சார்பில் நமச்சிவாயம், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
- 2026-27 சந்தைப் பருவத்திற்கான 14 காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலைகளை உறுதி செய்யும் வகையில், 2026-27 சந்தைப் பருவத்திற்கான காரீப் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
- முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சூரியகாந்தி விதைக்கு ஒரு குவிண்டாலுக்கு 622 ரூபாயும், பருத்திக்கு குவிண்டாலுக்கு 557 ரூபாயும், நைஜர் விதைக்கு குவிண்டாலுக்கு 515 ரூபாயும், எள்ளுக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர் கூலி, எந்திர வாடகை, நிலக் குத்தகைக்கான வாடகை, விதைகள், உரங்கள், எரு போன்ற இடுபொருட்களை பயன்படுத்துவதற்கு ஏற்படும் செலவுகள், பாசனத்திற்கான செலவுகள், வேளாண் கருவிகள் மற்றும் பண்ணைக் கட்டடங்களில் ஏற்படும் தேய்மானச் செலவுகள் உள்ளிட்ட நேரடி செலவுகளையும் மற்றும் இதர செலவுகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
- விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு மீது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் லாப விகிதம் பாசிப்பயிருக்கு அதிகபட்சமாக 61 சதவீதமாகவும் கம்பு, மக்காச் சோளம் பயிர்களுக்கு தலா 56 சதவீதமாகவும், துவரம் பருப்புக்கு 54 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- குஜராத் மாநிலம் அகமதாபாத் - டோலேரா இடையே பகுதி அதிவிரைவு இரட்டை வழி ரயில் பாதைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
- இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் 20,667 கோடி ரூபாயாகும். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்திய ரயில்வேயின் முதலாவது பகுதி அதிவிரைவு திட்டம் இதுவாகும்.
- இத்திட்டம், அகமதாபாத், டோலேரா எஸ்ஐஆர், விரைவில் அமையவுள்ள டோலேரா விமான நிலையம் மற்றும் லோத்தல் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் ஆகியவை இடையே விரைவான போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
- அகமதாபாதை டோலேராவுடன் இணைப்பது மூலம் பயணிகளின் பயண நேரம் குறையும். இது வசதியான தினசரி பயணங்களுக்கும், ஒரே நாளில் சென்று திரும்பும் பயணங்களுக்கும் வழி வகுக்கும்.
- இந்தப் புதிய ரயில்வழித்தடத்திற்கான பரிந்துரை நேரடி இணைப்பை வழங்குவதுடன் இந்திய ரயில்வேயின் செயல் திறனையும் சேவை நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.
- அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும். இப்பிராந்தியத்தில் முழு வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை தற்சார்புடையவர்களாக மாற்றும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்பரப்பு நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தத் திட்டம், இந்தியாவின் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை விரைவுபடுத்துவதற்கும், 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்கும் தேசிய இலக்கை அடைவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், யூரியா, அமோனியா, மெத்தனால் போன்ற முக்கியப் பொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் உதவும்.
- சுமார் 75 மில்லியன் டன் நிலக்கரி / பழுப்பு நிலக்கரியை வாயுவாக்கும் இலக்குடன், புதிய மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு ரூ.37,500 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆலை, இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான செலவில் அதிகபட்சமாக 20% வரை நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- திட்டச் செலவு, நிலக்கரி உள்ளீடு, செயற்கை எரிவாயு வெளியீடு ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்ட ஒரு மதிப்பீட்டுக் கட்டமைப்புடன், வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த ஏல செயல்முறையின் மூலம் தேர்வு நடைபெறும்.
- இத்திட்டத்தின் மூலம் நிலக்கரி வளம் நிறைந்த பகுதிகளில் உள்ள 25 திட்டங்களில் சுமார் 50,000 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 75 மில்லியன் டன் நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,300 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய விமான நிலைய ஆணையம் சார்பாக எம்ஐஎல் (மிஹான் இந்தியா லிமிடெட்) நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் குத்தகைக் காலத்தை 06.08.2039-க்கு மேல் கூடுதலாக நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- நாக்பூரில் பல்முனை சர்வதேச சரக்கு மையம் மற்றும் விமான நிலையத் திட்டமான மிஹான் திட்டத்தின் கீழ், நாக்பூர் விமான நிலையம் ஒரு பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கவுள்ளது. அதை நோக்கிய பயணத்தில் இந்த ஒப்புதல் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
- 2009-ம் ஆண்டில், இந்திய விமான நிலைய ஆணையம், மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றால் முறையே 49:51 என்ற பங்கு மூலதனக் கட்டமைப்பில் எம்ஐஎல் என்ற ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
- விமான நிலைய செயல்பாட்டிற்காக 2009-ம் ஆண்டில் விமான நிலைய ஆணையத்தின் சொத்துக்கள் எம்ஐஎல்-க்கு மாற்றப்பட்ட போதிலும், நில எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் காரணமாக குத்தகை பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, விமான நிலைய ஆணையத்தின் நிலம் 06.08.2039 வரை எம்ஐஎல்-க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
- தற்போது எம்ஐஎல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிலத்தின் குத்தகைக் காலம் 06.08.2039க்கு அப்பால் நீட்டிக்கப்படுகிறது.
- இது விமான நிலையத்தை 2வது கூட்டு முயற்சி நிறுவனமான ஜிஎன்ஐஏஎல்-லிடம் ஒப்படைக்க வழிவகுக்கும். இது நாக்பூர் விமான நிலையத்திற்கு ஒரு புதிய வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாக்பூரின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தை, ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் உச்சபட்ச திறனை எட்டும் வகையில் கட்டம் கட்டமாக மேம்படுத்தி, மத்திய இந்தியாவின் ஒரு முக்கிய விமான நிலையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

