//
Type Here to Get Search Results !

5th APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

5th APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இமயமலை அடிவாரத்தில் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்கள் கண்டெடுப்பு
  • வாடியா இமயமலை புவியியல் ஆய்வு நிறுவனம் இமயமலை தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம் உத்தரகாண்ட் எல்லையில் மோகந்த் என்னும் பகுதியில் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
  • தரை வாழ் உயிரினங்களின் படிமங்கள் மட்டுமே இந்தப் பகுதியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக நீர் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • மூன்று வெவ்வேறு மீன் இனங்களின் காது எலும்புகளை உள்ளடக்கிய இந்த படிமங்கள் சிவாலிக் பகுதியின் வரலாற்றுக்கு முந்தைய சூழல் பற்றிய பார்வையை வழங்குகிறது என ஆராய்ச்சியை வழிநடத்திய வாடியா நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் நிங்தௌஜாம் பிரேம்ஜித் சிங் கூறினார்.
  • இவரது குழு ஸ்னேக்ஹெட், கோபி, கௌராமி என்கிற 3 வகையான மீன் புதை படிமங்களை கண்டெடுத்துள்ளனர். இதில், கௌராமி வகை மிக அரிதானது. உலகிலேயே இரண்டாவது முறையாக இந்தோனேசியாவின் சுமத்ராவிற்கு பின் இங்கு மட்டுமே அது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இவை வெறும் புதை படிமங்கள் அல்ல என்றும் இழந்துபோன வாழ்வியல் எச்சங்கள் என்றும் பிரேம்சிங் ஜித் தெரிவித்தார்.
  • மோகந்த் பகுதி சுமார் 45 முதல் 48 லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காலத்தில் அடர்ந்த தாவரங்களால் சூழப்பட்ட அமைதியான, நன்னீர்ப் பகுதியாக இருந்துள்ளது. இது அநேகமாக ஒரு ஏரியாகவோ அல்லது மெதுவாக ஓடும் நதியாகவோ இருந்திருக்கலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel