
3rd APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
என்சிஇஆர்டிக்கு 'நிகர்நிலைப் பல்கலைக்கழக' அந்தஸ்து
- பாடத்திட்டங்களை உருவாக்குவதை முதன்மைப் பணியாகச் செய்து வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்துக்கு (என்சிஇஆா்டி) நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) வழங்கப்பட்டுள்ளது.
- என்சிஇஆா்டி, தனது சொந்த பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆலோசனையின் பேரில், மத்திய கல்வி அமைச்சகம், என்சிஇஆா்டி மற்றும் அதன் கீழ் இயங்கும் ஆறு நிறுவனங்களுக்கும் ஒரு தனித்துவமான பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்துள்ளது.
- இந்த ஆறு நிறுவனங்களில் அஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர் மற்றும் ஷில்லாங்கில் உள்ள மண்டலக் கல்வி நிறுவனங்களும், போபாலில் உள்ள பண்டிதர் சுந்தர்லால் சர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனமும் அடங்கும்.
- மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ஜனநாயக அரசைக் கலைத்து தளபதி மின் ஆங் லாய்ங் தலைமையில் ராணுவம் ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ராணுவ அரசால் நடத்தப்பட்ட தேர்தலில் புதியதாக 584 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- இந்தத் தேர்தல், ராணுவ அரசை ஆட்சியில் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்டதாகவும், வாக்குப் பதிவுகள் சுதந்திரமாக ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
- இந்த நிலையில், மியான்மரின் புதிய அதிபர் பதவிக்கு ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லாய்ங் உள்பட 3 பேர் போட்டியிட்டனர். இதில், மின் ஆங் லாய்ங் மொத்தமுள்ள 584 வாக்குகளில் 429 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளதாக, அந்நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஆங் லின் ட்வே வெள்ளிக்கிழமை (ஏப். 2) அன்று அறிவித்துள்ளார்.
- இதனைத் தொடர்ந்து, மின் ஆங் லாய்ங் மியான்மர் நாட்டின் புதிய அதிபராகவும், அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவர் துணை அதிபர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- முன்னதாக, மியான்மரின் அரசியலமைப்பில் அந்நாட்டின் அதிபர் முப்படைகளின் தளபதியாகப் பதவி வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மின் ஆங் லாய்ங் தனது ராணுவத் தளபதி பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

