
28th APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி
- 2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
- உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.
- இருப்பினும், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- அதேநேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சி தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 2011-2012 ஆம் ஆண்டின் 7.4 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
- கடந்த ஐந்தாண்டுகளில் 2021-22 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9.07 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை எட்டியிருக்கிறது.
- முந்தைய ஐந்தாண்டு (2016-17 முதல் 2020-21 வரை) சராசரியான 5.21 சதவிகிதம் வளர்ச்சியைவிட 3.86 சதவிகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
- நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
- தரவுகளின்படி, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ. 4.08 லட்சமாக உள்ளது. முதலிடத்தில் ரூ. 4.33 லட்சத்துடன் கர்நாடகம் முதலிடத்தில் இருக்கிறது.
- சிக்கிம் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா காங்டாக்கில் இன்று (ஏப்.28) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலம் காங்டாக்கிற்கு நேற்று (ஏப்.27) சென்றார்.
- அப்போது அவரை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துா், முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆகியோா் நேரில் வரவேற்றனர். அப்போது மோடி, சிக்கிம் மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி, கோட் அணிந்திருந்தார்.
- இந்த நிறைவு விழா தொடங்கிய நிலையில், சிக்கிம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ. 4,018 கோடி மதிப்பிலான 30 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடி கொடுத்ததுடன், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது.
- இதனால், உலகளவில் பல்வேறு நாடுகளில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், சில நாடுகளில் விலையும் உயர்த்தப்பட்டது.
- இதனிடையே, எண்ணெய்யின் விலையை உயர்த்துவதன் மூலம் மற்ற நாடுகளை பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (OPEC - ஒபெக்) சுரண்டுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
- ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், எண்ணெய்யைக் கொண்டு செல்வதில் ஒபெக் வளைகுடா உற்பத்தியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
- இந்த நிலையில், 2026 மே 1-லிருந்து ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகுவதாக அறிவித்துள்ளது. 1960-ல் தொடங்கப்பட்ட ஒபெக் அமைப்பில் 1967 முதல் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்றி வந்தது.

