//
Type Here to Get Search Results !

27th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

27th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
  • நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொகுப்பின் (Hydrogen Trainset) 'ஆஸிலேஷன்' (Oscillation) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் (Jind) மற்றும் சோனிபட் (Sonipat) இடையே இயக்கப்பட உள்ளது. சென்னையின் பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) இந்த அதிநவீன ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இது நாட்டின் ரயில் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
  • ஹைட்ரஜன் ரயில்கள் வணிக ரீதியான சேவைக்கு வரும்போது, ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் உலகின் ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக இணையும். 
  • இந்தச் சோதனையானது ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO) மூலம் மதிப்பீட்டு செயல்முறையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு
  • நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி அமோக வெற்றி பெற்றது. 
  • அந்நாட்டின் 47-வது பிரதமராகப் பாலேந்திர ஷா (35) இன்று அவர் பொறுப்பேற்றுள்ளார்.
  • இதன் மூலம் நேபாள வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
  • காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அதிபர் ராம்சந்திர பௌடல் (Ramchandra Paudel) பாலேந்திர ஷாவிற்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel