//
Type Here to Get Search Results !

24th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

24th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியாவின் 2026-27 நிதியாண்டு GDP வளர்ச்சி கணிப்பை 5.9% ஆகக் குறைத்தது Goldman Sachs நிறுவனம்
  • மத்திய கிழக்குப் போரால், உலகளவில் பணவீக்க அபாயம் அதிகரித்துள்ளதால், இந்தியாவின் 2026-27 நிதியாண்டு GDP வளர்ச்சி கணிப்பை Goldman Sachs நிறுவனம் 5.9% ஆகக் குறைத்துள்ளது.
  • கடந்த வாரம் 7%லிருந்து 6.5%ஆக வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 5.9% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்து, பௌத்தம், சீக்கிய மதத்திற்கே எஸ்.சி அந்தஸ்து பொருந்தும், மதம் மாறினால் எஸ்சி சான்றிதழ் ரத்தாகும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • மனுதாரர் சிந்தாதா ஆனந்த் பால், பல ஆண்டுகளுக்கு முன் மதம் மாறி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வந்துள்ளார். மேலும் ஞாயிறு தோறும் கிறிஸ்தவ தொழுகை நடத்தும் போதகராகவும் பணியாற்றியுள்ளார்.
  • அதேவேளையில் அந்த மனுதாரர், கிறிஸ்தவத்திலிருந்து தனது தாய் மதத்திற்கு மீண்டும் மதம் மாறினார் என்றோ அல்லது அவர் சார்ந்த சமூகத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்றோ எந்த ஆதாரமும் இல்லை. 
  • மாறாக, சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து கிறிஸ்தவத்தைப் பின்பற்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளில் தவறாமல் ஞாயிறு தொழுகைகளை நடத்தி, ஒரு போதகராகச் செயல்பட்டு வருகிறார் என்பதை ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே கிறிஸ்தவத்துக்கு மாறிய பின்பு அவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக இருக்க முடியாது.
  • மேலும் 1950ஆம் ஆண்டு பட்டியல் சமூக உத்தரவின் பிரிவு 3-ன் கீழ் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்படாத எந்தவொரு நபரும், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு சட்டப்பூர்வமான பலன், பாதுகாப்பு, இட ஒதுக்கீடு அல்லது உரிமையைக் கோர முடியாது, குறிப்பாக பிரிவு 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள மதத்தைத் தவிர வேறு ஒரு மதத்தை ஒரே நேரத்தில் பின்பற்றி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கோர முடியாது," என்றும், அந்த வகையில், இந்து, சீக்கியம் அல்லது புத்த மதங்களை தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதி உறுப்பினராக இருக்க முடியாது என்றும் வேறு எந்த மதத்திற்கும் மாறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க வழிவகுக்கும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
  • இந்த வழக்கில், சிந்தாதா ஆனந்த் பால், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பொய்யான புகாரைத் தாக்கல் செய்துள்ளார் என்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர் ஒருவரின் சாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்படவில்லை என்பதால் மட்டுமே, எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை அவருக்கு அளித்துவிடாது. 
  • ஏனெனில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாளிலேயே, அவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினர் என்ற தகுதியை இழந்துவிட்டார் என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel