
20th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஃபிக்கி மகளிர் அமைப்பின் தலைவராக டாக்டர் அமுல்யா ராவ் தேர்வு
- 2026-27 ஆம் ஆண்டுக்கான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளன மகளிர் அமைப்பின் (FICCI FLO) தலைவராக டாக்டர் அமுல்யா ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் ஏற்கெனவே இந்த அமைப்பின் மூத்த துணைத் தலைவராக உள்ளார். டாக்டர் அமுல்யா ராவ் - மருத்துவர், கல்வி ஆலோசகர், தொழிலபதிபர், சமூகத் தலைவர், தொழில் துறை வல்லுநர் என பன்முகங்களைக் கொண்டவர்.
- சர்வதேச மகளிர் சங்கம், இளம் தலைவர்கள் அமைப்பு (YPO) - சென்னை கிளையில் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார்.
- இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளன மகளிர் அமைப்பின் தீவிர உறுப்பினராகவும் பல்வேறு முக்கியப் பதவிகளில் இருந்து, இப்போது மூத்த துணைத் தலைவராக உள்ளார். தொடர்ந்து இந்த அமைப்பின் தலைவராக (2026-27) பொறுப்பேற்கவுள்ளார்.

