//
Type Here to Get Search Results !

10th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

10th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நாடு முழுவதும் ESMA அமல்
  • ஈரான் போரால் நம் நாட்டில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
  • அந்த வகையில் தற்போது ESMA சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
  • சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல், தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதிகபட்ச விலைக்கு கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்தல் உள்ளிட்டவை இந்த சட்டத்கீழ் குற்றமாகும்.
  • இத்தகைய செயலில் ஈடுபட்டால் ESMA சட்டத்தின்படி பிடிவாரண்ட் இன்று கைது செய்யவும், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும், அபராதம் விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விமான நிலையமாகிறது மதுரை விமான நிலையம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் பழமையான விமான நிலையங்களில் ஒன்று. தெற்கு தமிழ்நாட்டிற்கான ஒரு முக்கிய நுழைவுவாயிலாக இருக்கிறது. 
  • சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பல்வேறு நாடுகளை இணைக்கும்.
  • அதேபோல கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel