//
Type Here to Get Search Results !

9th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

9th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடாவின் புதிய ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனம். 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 
  • அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
  • அரசு இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு துரிதமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். 
  • உலகப் புகழ் பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ள இவ்வாலையின் முதலாவது வாகனம் இன்று வெளியிடப்பட்டது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகைச்சி
  • ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷிகெரு இஷிபா. ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த இவருடைய கட்சியினர் ஊழல் புகாரில் தொடர்ந்து சிக்கியதால் நாடாளுமன்றத்தில் இவரது கட்சி பெரும்பான்மையை இழந்தது.
  • இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். பொதுவாக ஜப்பானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரித்தால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு வழிவகுப்பார்கள்.
  • ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே இதனை மேற்கொண்டு தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டித்து கொள்வது வழக்கமாக உள்ளது. 
  • இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த லிபரல் கட்சியை மீட்டு டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை எந்த வித இடையூறும் இல்லாமல் அமல்படுத்த சனே தகைச்சி நாட்டின் இரு அவைகளையும் கடந்த மாதம் கலைத்தார்.
  • தொடர்ந்து பொதுத்தேர்தல் நேற்று (பிப்.8) நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தமாக 465 நாடாளுமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பெரும்பான்மையை பெற 233 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 
  • அந்த வகையில், ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான ஆளுங்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 
  • இதில், ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி 316 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel