//
Type Here to Get Search Results !

2nd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

2nd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு உலகளாவிய சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு 2026யை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள போர் பாயிண்ட் ஷெரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் உள்ள கூட்ட அரங்கில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறை இணைந்து நடத்தும் ''தமிழ்நாடு உலகளாவிய சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு – 2026" நடைபெற உள்ளது. 
  • மாநாட்டை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த, மாநாட்டில் சுற்றுலா தொழில், முதலீடுகள், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சுற்றுலாத் தலங்கள், தமிழ்நாட்டின் கலாச்சாரம், தொழில் துறைகள் முக்கிய பங்கு, சர்வதேச அளவில் சுற்றுலாவின் வளர்ச்சி, சுற்றுலாவுக்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் இந்த 2 நாள் மாநாட்டில் பங்கேற்க சுற்றுலாத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 
  • மேலும், உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு நடைபெறயுள்ள மாநாட்டு அரங்கிற்கு அருகே 100 மீட்டர் நீளம், 50 அகலம் கொண்ட பிரமாண்ட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் ரூ. 22,794 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
தலாய் லாமாவுக்கு கிராமி விருது 2026
  • திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியானம் தொடர்பான பேசும் புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த பேசும் புத்தகம் தியானத்தின் முக்கியத்துவத்தை எளிய வார்த்தைகளில் விளக்குகிறது. மன அமைதி மற்றும் உள்ளார்ந்த சாந்தி பற்றி இதில் பேசப்பட்டுள்ளது. 
  • பல நாடுகளில் இந்த புத்தகம் வரவேற்பு பெற்றுள்ளது. ஆன்மிக இலக்கியத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தலாய் லாமாவின் குரல் தான் இதன் தனிச்சிறப்பு. இந்த கிராமி விருதை தலாய் லாமா சார்பில் இசையமைப்பாளர் ருபுஸ் பெற்றுக் கொண்டார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel