//
Type Here to Get Search Results !

22nd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

22nd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அஞ்சல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • அஞ்சல் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரேசிலும் கையெழுத்திட்டுள்ளன. இது அஞ்சல் சேவைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
  • பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் இந்திய பயணத்தின் போது, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம் சிந்தியா, பிரேசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஃபிரடெரிகோ டி சிக்வேரா பில்ஹோ ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த ஒப்பந்தம் இந்திய அஞ்சல் துறைக்கும் பிரேசிலின் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பை நிறுவுகிறது. 
  • இது அஞ்சல் துறையில் ஒத்துழைப்பையும் அறிவுப் பரிமாற்றத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அஞ்சல் துறை கொள்கைகள், செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகள், நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளுதல், சேவை அமைப்புகளை வலுப்படுத்துதல்,
  • அஞ்சல் நிதி சேவைகளில் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றங்கள், பரஸ்பர ஆர்வமுள்ள கூட்டு முயற்சிகள், அஞ்சல் தொடர்பான உலகளாவிய பலதரப்பு மன்றங்களில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
  • அஞ்சல் அமைப்புகளை நவீனமயமாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சி, நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் அஞ்சல் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதிலும் இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்படும் உறுதிப்பாட்டை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel