//
Type Here to Get Search Results !

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025 - 2026 / TAMILNADU ECONOMIC SURVEY 2025 - 2026

  • தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025 - 2026 / TAMILNADU ECONOMIC SURVEY 2025 - 2026: முதல்வர் மு. க. ஸ்டாலின் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று(பிப். 16) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
  • தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26, கடந்த ஐந்து ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது.
  • இவ்வறிக்கை 10 அத்தியாயங்களில் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாக விளக்குகிறது
  • இவ்வறிக்கையானது, மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகளை விளக்குவதுடன், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தனிநபர் வருமானம் ஆகிய இரு இலக்குகளையும் அடைய கவனிக்க வேண்டிய பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது.
  • இந்த பொருளாதார ஆய்வறிக்கை, கொள்கை வகுப்பாளர்கள், வணிகம், தொழில்வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
  • பொருளாதார போக்குகளை ஆவணப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால மேம்பாட்டு உத்திகளை வடிவமைப்பதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கருவியாக செயல்படும்.
  • இதில், தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தைப் பொருளாதார ரீதியாக 1 டிரில்லியன் டாலர் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் இலக்கை எட்டத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும், கடந்த ஓராண்டில் மட்டும் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களைத் தமிழகத்தை நோக்கி அதிகளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENGLISH

  • TAMILNADU ECONOMIC SURVEY 2025 - 2026: Chief Minister M. K. Stalin released the Tamil Nadu Economic Survey for the year 2025-2026, prepared by the State Planning Committee, at a function held at the Secretariat today (Feb. 16).
  • The Tamil Nadu Economic Survey 2025-26 highlights the growth trajectory of the state’s economy for the last five years.
  • The report explains in detail various key aspects of the economy and how they have performed in 10 chapters.
  • The report explains the economic performance of the state and also points out the areas that need attention to achieve both the goals of a trillion dollar economy and a per capita income at par with developed countries.
  • The Economic Survey provides important information to policymakers, businesses, professionals and analysts.
  • By documenting economic trends, it will serve as an important tool for shaping Tamil Nadu’s future development strategies and strengthening evidence-based policy decisions.
  • In it, it is noted that Tamil Nadu’s GDP growth rate is higher than the national average.
  • It has been reported that all the necessary infrastructure facilities are ready to achieve Chief Minister M.K. Stalin's goal of making Tamil Nadu an economically 1 trillion dollar state by 2030.
  • In particular, the report points out that Tamil Nadu continues to be the top exporter of electronics and that 30 lakh new jobs have been created in the last one year alone. This is expected to attract more investors towards Tamil Nadu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel