
1st FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆஸ்திரேலிய ஓபன் 2026 - அல்காரஸ் சாம்பியன்
- ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அல்காரஸ் தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
- அவருக்கு இந்திய மதிப்பில் ₹25.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இப்போட்டி மூலம், 22 வயதில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அல்காரஸ் அடைந்தார்.
- அல்காரஸ் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய பட்டங்களை தலா இருமுறை வென்றிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றதன் மூலம், டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றிய வீரர் என்ற அரிய அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ளார்.

