//
Type Here to Get Search Results !

19th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

19th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஸ்ரீபெரும்புதூரில் 300 ஏக்கரில் பிரம்மாண்ட ஏ.ஐ பேக்டரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
  • முன்னணி கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி (L&T) மற்றும் உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (NVIDIA) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிரம்மாண்ட 'ஏஐ ஃபேக்டரி' (AI Factory) எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
  • டெல்லியில் நடைபெற்று வரும் ஏ.ஐ. மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 'எல் அண்ட் டி கிளவுட்பினிட்டி' (L&T Cloudfiniti) தரவு மையத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன என்விடியா ஜிபியு (NVIDIA GPU) கட்டமைப்புகள் நிறுவப்பட்டு, இதன் திறன் 30 மெகாவாட் வரை உயர்த்தப்பட உள்ளது.
  • 'NVIDIA GPUs' என்பவை கணினியின் முக்கியமான பாகமாகும். இது ஒரு நொடியில் பல கோடி கணக்குகளைச் செய்து, ஏஐ (AI) மென்பொருள்களை மின்னல் வேகத்தில் இயங்க வைக்கும். 
  • 300 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த ஏஐ மையம் இந்தியாவின் முக்கியமான தரவுகள் (Data) மற்றும் தகவல்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்.
  • சென்னை போன்று மும்பையிலும் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க எல் அண்ட் டி மற்றும் என்விடியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தில்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டை தொடக்கி வைத்தார் மோடி
  • செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை தொடக்கிவைத்தார்.
  • தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடியுடன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
  • இந்த மாநாட்டில், பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மேலும், நிா்வாகம், உள்கட்டமைப்பு, சா்வதேச ஒத்துழைப்பு என ஏஐ தொழில்நுட்பத்தின் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
  • தொடர்ந்து, இன்று மாலை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளார்.
  • மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 60 அமைச்சா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
  • கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel