
13th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி, புத்தாக்க மையம் அமைப்பதற்கு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- KLA கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான KLA இந்தியா நிறுவனம், 3,600 கோடி ரூபாய் முதலீட்டு பொறுப்புறுதியுடன் சென்னையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க வளாகத்தை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- 12 ஏக்கர் நிலப்பரப்பளவிலான இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், சுமார் 4,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
- அந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் குடியிருப்புகள், கட்டிட அமைப்புகள், கருவிகள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்த ஆய்வுகள் தமிழர் நாகரிகம் மிகப் பழமையானதும், முன்னேறிய நகர்ப்புற வாழ்க்கை முறையுடனும் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்தன.
- இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை அப்படியே பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
- கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
- உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
- டெல்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டத்தின் பெயர் “சேவா தீர்த்” (சேவைத் தலம்) என்றும், கர்த்தவ்ய பவன் (மத்திய அரசின் தலைமைச் செயலகம்) என்றும் அழைக்கப்படுகிறது.
- மேலும், கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ல் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பல முக்கிய அமைச்சகங்களை உள்ளடக்கியுள்ளன.

