
31st JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றார்
- மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் பராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள துணை முதல்வர் பதவிக்கு அவரது மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான (MP) சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
- இந்நிலையில் மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார்.
- 62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார். இதனைத் தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வராகிறார்.
- பாராமதி பகுதியை உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவாக மாற்றியதில் சுனேத்ராவுக்கு பங்கு உண்டு. சுனேத்ரா பவார் துணை முதல்வராக ஆவதால், அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.
- 2014ம் ஆண்டில் 26 தளங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, தற்போது 98 தளங்களாக, 276 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.
- உத்தரப் பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள சாரி-தாண்ட் ஆகியவை ராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்த இரண்டு ஈரநிலங்களும் நூற்றுக்கணக்கான வலசை போகும் மற்றும் உள்ளூர் பறவை இனங்களுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளன. இந்த பகுதிகள், அழிந்து வரும் பறவைகளைத் தவிர, சிங்காரா, ஓநாய்கள், காரக்கால், பாலைவனப் பூனைகள் மற்றும் பாலைவன நரிகள் போன்ற வனவிலங்குகளுக்கும் புகலிடமாக உள்ளன.
- ஈரானின் ராம்சர் நகரில், கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், இது குறித்த உடன்படிக்கை ஒன்றில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1982ம் ஆண்டு பிப்ரவரி 1 - ம் தேதி இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
- ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கஜகாஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினா வென்றார்.
- இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலராஸின் அரியானா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.

