//
Type Here to Get Search Results !

30th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

30th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அரசு பள்ளித் தூதுவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
  • அரசு பள்ளித் தூதுவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (30.01.2026) சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தினை அரசுப்பள்ளித் தூதுவர்கள் பதவியேற்பு உறுதிமொழியில் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.
  • அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் வழிகாட்டுதல் திட்டத்தினை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியினை வெளியிட்டார்.
அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
  • உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மாதவிடாய் சுகாதார உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.
  • பெண்களுக்கு கழிப்பறைகள் மற்றும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்கத் தவறினால், அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகள் வழங்கத் தவறும்பட்சத்தில், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தனர்.
  • மேலும், "நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள பள்ளிகளில் பெண், ஆண் மாணவர்களுக்கு தனித்தனி கழிப்பறைகளை உறுதிசெய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற கழிப்பறைகளை வழங்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.
  • அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் இணக்க அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel