
29th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360
- கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற 'முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360' (International Textile Summit) நிகழ்வில், தமிழகத்தின் ஜவுளித் துறையில் மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.
- இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் மொத்தம் 13,080 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- மாநாட்டில் 'தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2024-25' வெளியீடு மற்றும் மானிய திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- 15 ஆண்டுகால பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்தப் பெறப்படும் வங்கி கடனுக்கு 2% வட்டி மானியம் (7 ஆண்டுகளுக்கு) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- சாதாரண விசைத்தறிகளைத் தானியங்கி ரேப்பியர் தறிகளாக மாற்ற 50% மானியமும் (அதிகபட்சம் 1.00 லட்சம் ரூபாய்), புதிய தானியங்கி தறிகள் வாங்க 20% முதலீட்டு மானியமும் வழங்கப்படுகிறது.
- புதிய துணி நூல் பதனிடும் ஆலைகளைத் தொடங்கவும், பழைய ஆலைகளை நவீனப்படுத்தவும் 3 நிறுவனங்களுக்கு 10.92 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஜவுளி ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களைச் சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
- சிறு, குறு, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்கள் என 5 பிரிவுகளில் முதலிடம் பெற்ற நிறுவனங்களுக்குத் தலா 2.00 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 29) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், "இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026" (India Global Education Summit 2026) தொடக்க விழாவில் 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- மேலும், அறிவு, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டின் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டன.
- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்துகுளம், மேல்மளிகைப்பட்டு மற்றும் இனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- மெல்போர்ன் பல்கலைக்கழகம் - குவாண்டம் கணினி மற்றும் வேளாண் தொழில்நுட்ப துறைகளில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தை 20,000 சதுர அடியில் 35 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து ஆண்டுகளில் Knowledge Corridor-ஐ நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 25 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 200 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
- ஐஐடி சென்னை - மேம்பட்ட ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி மையம், மின்சார வாகனங்களுக்கான மாற்று ஆராய்ச்சி மையம் மற்றும் சோதனை ஆய்வகத்தை 40,000 சதுர அடியில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge Tower-ல் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 100 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
- ஐஐடி சென்னை குளோபல் 20,000 சதுர அடியில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி திறன் வசதி மையத்தை மேம்பட்ட திறன் மற்றும் புதுமையை முன்னெடுக்கும் வகையில் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.
- ஆர்க்ஸீ, கார்பன் பிடிப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் 10,000 சதுர அடியில் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.
- அக்யூமென், TIDCO உடன் இணைந்து 120 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge City-யை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை திட்டங்களை செயல்படுத்த விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 150 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
- தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுகூனம் (Guidance Tamil Nadu) உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
- இந்த இந்தியா உலகளாவிய கல்வி மாநாட்டில், 5 விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டு, 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் ரூ. 355 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடன், 2,255 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 9,650 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தொழில் துறை வளா்ச்சி வெறும் 3.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், 2025 டிசம்பரில் அது இரண்டு மடங்குக்கும் மேலாக உயா்ந்துள்ளது.
- உற்பத்தித் துறை முந்தைய ஆண்டு டிசம்பரில் 3.7 சதவீத வளா்ச்சியடைந்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளது.
- முந்தைய ஆண்டின் 2.7 சதவீத வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில், சுரங்கத் துறை உற்பத்தி தற்போது 6.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. மின்சாரத் துறை உற்பத்தி 6.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக, கணினி, மின்னணு சாதனங்களின் உற்பத்தி 34.9 சதவீதமும், காா் உள்ளிட்ட மோட்டாா் வாகன உற்பத்தி 33.5 சதவீதமும், இதர போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி 25.1 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன.
- மேலும், அடிப்படை உலோகங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு வலுசோ்த்துள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி 12.3 சதவீத வளா்ச்சியையும் எட்டியுள்ளன.
- கடந்த நவம்பா் மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி வளா்ச்சி 6.7 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் முழுமையான தரவுகளுக்குப் பிறகு, தற்போது அது 7.2 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
- டிசம்பா் மாதத்தில் வளா்ச்சி அதிகமாக இருந்தாலும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி (ஏப்ரல் முதல் டிசம்பா் வரை) 3.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 4.1 சதவீதத்தை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

