
28th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விபத்தில் மரணம்
- மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், இன்று காலை புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அவரது தனி விமானம் விபத்துக்குள்ளானது.
- விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த இந்த தனி விமானம், சுமார் 16 ஆண்டுகள் பழமையான 'பம்பார்டியர் லியர்ஜெட்' ரகத்தைச் சேர்ந்த நடுத்தர வணிக ஜெட் ஆகும். இந்த விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து காலை 8.10 மணிக்கு பாராமதிக்குக் கிளம்பியது.
- விமானத் தரவுகளின்படி, விமானம் 8.30 மணியளவில் பாராமதியை அடைந்து, கடுமையான பார்வைக் குறைபாடு காரணமாக முதல் தரையிறங்கும் முயற்சியை ரத்து செய்தது.
- இரண்டாவது முறையாக சரியாக 8.45 மணியளவில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஸ்திரத்தன்மையை இழந்து கடும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
- விமான ஓடுதளத்தின் அருகில் விலகிச் சென்ற விமானம், 11ம் எண் கொண்ட ஓடுதளத்தின் தொடக்கப் பகுதிக்கு அருகில் இருந்த பாறையின் மீது மோதி உடனடியாகத் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

