
27th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக மகளிர் உச்சி மாநாடு 2026 மற்றும் TNWESAFE திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டம், ஐந்து ஆண்டு காலத்திற்கு (2024-2029) 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் 1,185 கோடி ரூபாய் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
- தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், "கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும் HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
- இதற்கென 2025 - 26 ஆம் ஆண்டில் 36 கோடி ஒதுக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் கருப்பைவாய்ப் புற்றுநோயை தடுத்திடும் வகையில் இத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
- இதில் முதற்கட்டமாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுடைய 30,209 மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
- வரும் நாட்களில் 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
- இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பையும் இணைக்கும் வகையில் சுமார் 2 பில்லியன் மக்களை கொண்ட மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை அறிவித்தனர்.
- இதன் மூலம் BMW, Mercedes-Benz போன்ற ஆடம்பர கார்களின் இறக்குமதி வரி படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 110 சதவீதம் வரை உள்ள வரி, எதிர்காலத்தில் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் ஆடம்பர கார்கள் மலிவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும் ஐரோப்பிய ஒயின், சாக்லேட் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படும். ஜவுளி, நகை, மருந்து போன்ற இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் பெரிய வாய்ப்புகள் உருவாகும்.
- 18 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கு புதிய வேகத்தை தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

