
21st JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கான பங்கு மூலதனத் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
- இந்த பங்கு மூலதனத் தொகை, நிதிச் சேவைகள் துறையால் மூன்று தவணைகளாக அந்த வங்கியின் கணக்கில் செலுத்தப்படும். இதில், 2025-26 - ம் நிதியாண்டில் 3,000 கோடி ரூபாயும், 31.03.2025 அன்று இருந்த 568.65/- கோடி ரூபாயாக இருந்த அதன் புத்தக மதிப்பிற்கு ஏற்ப செலுத்தப்படும்.
- எஞ்சியுள்ள தொகை தலா 1,000 கோடி ரூபாய் வீதம் 2026-27 மற்றும் 2027-28 ஆகிய நிதியாண்டுகளில் இரண்டு தவணைகளாக, அதற்கு நிதியாண்டின் முந்தைய ஆண்டு மார்ச் 31 - ம் தேதி அன்று இருந்த புத்தக மதிப்பில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்த 5,000 கோடி ரூபாய் பங்கு மூலதனத் தொகை அந்த வங்கிக்கு செலுத்தப்பட்ட பிறகு, நிதி உதவி வழங்கப்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை, 2025 - ம் நிதியாண்டின் இறுதியில் இருந்த 76.26 லட்சம் என்ற எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2028 - ம் நிதியாண்டின் இறுதிக்குள் 102 லட்சமாக (சுமார் 25.74 லட்சம் புதிய எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இணைக்கப்படும்) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அண்மையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி (30.09.2025 நிலவரப்படி), 6.90 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்களால் 30.16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன (அதாவது, ஒரு எம்எஸ்எம்இ நிறுவனத்திற்கு 4.37 நபர்களுக்கு வேலைவாய்ப்பு).
- இந்த சராசரியைக் கருத்தில் கொண்டு, 2027-28 - ம் நிதியாண்டின் இறுதிக்குள் 25.74 லட்சம் புதிய எம்எஸ்எம்இ நிறுவனங்களை இணைப்பதன் மூலம், 1.12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2030-31-ம் நிதியாண்டு வரை தொடர்வதற்கும், நிதிப்பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கும் மக்கள் தொடர்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஆதரவை நீட்டிப்பதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- அதன்படி, விழிப்புணர்வு, திறன் மேம்பாடு உள்ளிட்டவை மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களிடையே இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தல் நிதிப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வது மற்றும் இத்திட்டத்தின் நீடித்தத் தன்மையை உறுதி செய்வது ஆகியவை இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதனால் லட்சக்கணக்கான குறைந்த வருவாய் உடைய மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமைக்கால வருவாய்ப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
- நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தி ஓய்வூதிய சமூகத்தை நோக்கிய இந்தியாவின் மாற்றத்திற்கு இது ஆதரவளிக்கிறது. நீடித்த சமூக பாதுகாப்பை அளிப்பதன் மூலம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை இம்முடிவு வலுப்படுத்துகிறது.

