
20th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அசாமில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.213.9 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
- அசாமில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.213.9 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது 2025-26-ம் நிதியாண்டிற்கான முதலாவது தவணைத் தொகையாகும்.
- இந்தத் தொகை மாநிலத்தின் அனைத்து 2,192 தகுதி வாய்ந்த கிராமப் பஞ்சாயத்துகள், 182 தகுதி வாய்ந்த வட்டார பஞ்சாயத்துகள், 27 தகுதி வாய்ந்த மாவட்ட பஞ்சாயத்துகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஜல்சக்தி (குடிநீர் மற்றும் தூய்மைப் பணித்துறை) மூலம் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15வது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க மத்திய அரசு பரிந்துரை செய்கிறது.
- அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகம் இந்த நிதியை விடுவிக்கிறது. ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளாக இத்தொகையை விடுவிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- சர்வதேச நாணய நிதியத்தின், 2026ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது "இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது.
- ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம்
- உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும்.
- உலக அளவிலான வளர்ச்சியை தற்போது வர்த்தக கொள்கைகளில் நடக்கும் மாற்றங்கள் குறைக்கின்றன. ஆனாலும், தென் அமெரிக்கா மற்றும் ஆசியா தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயில் முதலீடு செய்வதால், வளர்ச்சி வேகத்தின் குறைவு சமன் செய்யப்படுகிறது".
- சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும், மத்திய அரசின் கணிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. 2025 - 26 நிதியாண்டின் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

