
19th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தேசிய வனவிலங்கு வாரியத்தின் 88வது நிலைக்குழுக் கூட்டம்
- தேசிய வனவிலங்கு வாரியத்தின் 88வது நிலைக்குழுக் கூட்டம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் இன்று புதுதில்லியில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 விதிகளுடன் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள், புலி காப்பகங்கள், சுற்றுச்சூழல் மண்டலங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பயன்பாட்டு சேவைகள், ராணுவத்தினரின் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான 70 பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டது.
- உள்ளூர் சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் விநியோகம் தொடக்கம் மற்றும் சமுதாய சுகாதார மையங்கள், சாலைகளை அகலப்படுத்துதல், 4ஜி மொபைல் கோபுரங்கள், ஒளிபரப்பு இணைப்புகள் தொடர்பாக இக்குழு பரிசீலித்தது.
- பண்டல்கண்டில் குடிநீர் மற்றும் பாசனநீர் விநியோகத்திற்காக மத்தியப்பிரதேசத்தில் நடுத்தர பாசனத்திட்டம் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
- எல்லைப்பகுதி மற்றும் உயர்ந்த மலைப்பகுதகளில் உத்திசார்ந்த உள்கட்டமைப்புத் தொடர்பாக லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் ராணுவம் தொடர்புடைய 17 பரிந்துரைகளையும் நிலைக்குழு பரிசீலித்தது.

